Thiruparankundram Issue (Photo Credit: Facebook)

பிப்ரவரி 04, திருப்பரங்குன்றம் (Madurai News): திருப்பரங்குன்றம் (Thiruparankundram) மலையில் காசி விஸ்வநாதர் கோயில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி ஆட்களுடன் வந்தார். அப்போது எம்பியுடன் வந்தவர்கள் மலைப்பகுதியில் அசைவ உணவு சாப்பிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இவற்றால் திருப்பரங்குன்றம் மலைப் பிரச்சினை சர்ச்சையானது.

மதுரையில் 144 தடை:

இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி பிப். 4-ல் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் 16 கால் மண்டபம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனை ஒட்டி மதுரை மாவட்ட காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்தது. மதுரை மாவட்ட எல்லை, மாநகர் எல்லை பகுதியில் பேரிகார்ட் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள பகுதிகள், கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் 1000.,க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துமீறி நுழைவோரை காவல் துறை கைது செய்து வருகிறது. Kallakurichi: பெண் விஏஓ மீது மாட்டுச்சாணி வீசி தாக்குதல்.. உதவியாளர் அதிர்ச்சி செயல்.. கள்ளக்குறிச்சியில் பகீர்.!

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்:

இதேசமயம், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் 144 தடை உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் பூர்ணிமா அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது இது குறித்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில்,"திருப்பரங்குன்றம் விவகாரம் மற்றொரு பாபர் மசூதி பிரச்சனை உருவாகி விடக்கூடாது. மேலும் வரும் 11ஆம் தேதி வரை விழாக்காலம் என்பதால் அதுவரை போராட்டம் நடத்த அனுமதிப்பது கடினம். மீறி போராட்டம் நடத்துவோர் கைது செய்யப்படுவார்கள்,"என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே, அதில் பொதுமக்கள் கலந்து கொண்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி அறிக்கை வெளியிட்டது சரியான நடவடிக்கை அல்ல. எப்போது அனுமதி வழங்க இயலும், ஆக்கிரமிப்பை கண்டித்தும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. கால்நடைகளை பலியிட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?, ஆக்கிரமிப்பை கண்டித்தும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. கால்நடைகளை பலியிட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? " என்றனர். Sivagangai News: மதநல்லிணக்கத்தின் இலக்கணம் நாங்கள்.. கோவில் குடமுழுக்கு பண்டிகைக்கு சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமிய சொந்தங்கள்.!

ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி:

மேலும், "ஆர்ப்பாட்டம் நடத்துவது உரிமை என்றாலும் அது அரசியலமைப்பிற்கு உட்பட்டும், பொது அமைதிக்கு பிரச்னை ஏற்படுத்தாத வகையிலும் இருக்க வேண்டும். பழங்காநத்தம் பகுதியில் 5 முதல் 6 மணி வரை 1மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். 1 மைக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெறுப்பைத் தூண்டும் வகையிலான முழக்கங்களை எழுப்பக்கூடாது, ஆர்ப்பாட்டம் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்" என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

திருப்பரங்குன்ற மக்களின் நிலைப்பாடு:

திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அருணா, “கந்தூரி விழாக்களுக்கு இந்துக்களும் நன்கொடை தருவோம். இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருக்கிறோம். இது ஒரு பிரச்சனையாகவே எங்களுக்கு தெரியவில்லை” என்கிறார். மேலும் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த குர்ஷித், ”இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருக்கிறோம். ஆடு,கோழி நேர்த்திக்கடன் கொடுப்பது ஆண்டாண்டு பழக்கம். ஒற்றுமையாக இருக்க அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்.

பழங்காநத்தத்தில் இந்து அமைப்பினர் போராட்டம்: