Accuse Sangeetha | Victim VAO Tamilarasi (Photo Credit: Facebook)

பிப்ரவரி 04, கச்சிராயபாளையம் (Kallakurichi News): பெண் கிராம நிர்வாக அலுவலரின் மீது, அலுவலக உதவியாளர் ஒருவர் தாக்குதல் நடத்தினார். முன்விரோதத்தில் சாணி வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது.

கள்ளக்குறிச்சி (Kallakurichi) மாவட்டத்தில் உள்ள கச்சிராப்பாளையம், வடக்கனந்தல் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக தமிழரசி என்ற பெண்மணி பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக சங்கீதா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சொந்த ஊரிலேயே பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று, சங்கீதா அலுவலக கணக்கு-வழக்கு தொடர்பான புத்தகங்களை தனது வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.

கிராம நிர்வாக உதவியாளர் பணியிடைநீக்கம்:

இதனை அறிந்த தமிழரசி, சங்கீதாவின் செயல்பாடுகளை கண்டித்து இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா, கிராம நிர்வாக அலுவலரை கடந்த மாதம் அலுவலகத்தில் வைத்து பூட்டிவிட்டு சென்றார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகி, தமிழரசி அளித்த புகாரின் பேரில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் சங்கீதா பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். Job Alert: இளைஞர்களே ரெடியா? மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.. எங்கு? எப்போது? விபரம் உள்ளே.! 

கிராம நிர்வாக அலுவலரின் மீது மாட்டுச்சாணம் வீசி தாக்குதல்:

இந்த விஷயத்தில் சங்கீதா கடும் ஆத்திரத்தில் இருந்து வந்ததாக தெரியவருகிறது. இந்நிலையில், இன்று காலை சுமார் 11:30 மானியாவில், கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது, கையில் பையுடன் வந்த சங்கீதா, சற்றும் எதிர்பாராத விதமாக தமிழரசியை தாக்கினார். மேலும், அவரின் முகத்தில் மாட்டுச் சாணத்தை வீசி தாக்குதல் நடத்தினார். பின், விஏஓ-வின் துப்பட்டாவை பிடித்து இழுத்து கீழே தள்ளி தாக்கினார். பின் அங்கிருந்து அவர் தப்பிச் சென்றுவிட்டார்.

தலைமறைவானவருக்கு காவல்துறை வலைவீச்சு:

இந்த சம்பவத்தில் காயமடைந்த கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி, மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சங்கீதாவை தேடி வருகின்றனர். ஏற்கனவே இருவருக்கும் இருந்த கருத்து முரண்பாட்டில், சங்கீதா செய்த சர்ச்சை செயலால் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். தற்போது கிராம நிர்வாக அலுவலரின் மீது அவர் சாணியை கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.

கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணியாற்றி வந்த பெண், பதவி திமிரில் தனது உயர் அதிகாரிக்கு எதிராக சர்ச்சை செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறானவர் எப்படி மக்கள் பணியில் மக்களுக்கான பணியை செய்திருப்பார்? என்ற கேள்வியும் எழுகிறது.

பெண் விஏஓ மீது சாணி வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்:

Video Courtesy: Polimer News