ஜனவரி 24, தேனாம்பேட்டை (Chennai News): சென்னையில் உள்ள தேனாம்பேட்டை, தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில், இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி (Senthil Balaji) தலைமையில், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நிறைவுபெற்ற பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். Scam Alert: தமிழக பெற்றோர்களே வங்கிக்கணக்கு, ஒடிபி கேட்டு போன் வருகிறதா? மோசடி செயல்.. உஷார்.!
மாதம் தோறும் மின் மின்சார கட்டணம்:
குறிப்பாக, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகளே எஞ்சியிருக்கும் நிலையில், 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக சார்பில் ஸ்மார்ட் மீட்டர் வீடுகளில் பொருத்தப்பட்டு, மாதம் ஒருமுறை மின்சார கட்டணம் செலுத்தும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மாதம் ஒருமுறை மின்சார கட்டணம் செலுத்து முறை தொடங்கவில்லை. மேலும், கோடைகாலம் வரவுள்ள நிலையில், மக்களுக்கு சீரான மின்னிணைப்பு விநியோகத்தை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அமைச்சர் பென்ஹில் பாலாஜி பதில்:
இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாடு முழுவதும் உள்ள வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின்னர், மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூல் செய்யும் முறை தொடங்கும். கட்டாயம் விரைவில் மாதம் ஒருமுறை கட்டணம் செலுத்தும் முறைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். கோடைகாலத்தில் மின் தேவை 22000 மெகாவாட் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சீரான மின்விநியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது" என கூறினார்.