Injuried Boy | Drunken Man File Pic (Photo Credit: Source / Pixabay)

மே 02, போடி (Theni News): தேனி மாவட்டத்தில் உள்ள போடி, டி.வி.கே நகர் பகுதியில் வசித்து வருபவர் ஷேக் அப்துல்லா. இவரின் மகன் அபியுல்லா (வயது 6). சிறுவன் நேற்று காலை அப்பகுதியில் உள்ள சாலலயில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அச்சமயம், அவ்வழியே வந்த இருசக்கர வாகன ஓட்டி சிறுவனின் மீது மோதியுள்ளார்.

அப்போது, சிறுவனின் சட்டை இருசக்கர வாகனத்தின் கம்பியில் சிக்கிக்கொண்ட நிலையில், சிறுவன் கூச்சலிட்டு இருக்கிறான். இருசக்கர வாகனத்தில் வந்தவர் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து அதனை இயக்கியதால், சிறுவன் தொடர்ந்து இழுத்து செல்லப்பட்டுள்ளான். அப்பகுதி மக்கள் அனைவரும் இருசக்கர வாகன ஓட்டியை தடுக்க முயற்சித்துள்ளனர்.

அவர்களின் முயற்சி பலனளிக்காமல் போக, சிறுவனை நெடுந்தூரம் இழுத்து சென்று பார்த்த கொடூரன், முட்புதர் குப்பையில் சிறுவனை வீசிவிட்டு தப்பி சென்றுள்ளான். சிறுவனின் முகம், கை, கால், வயிறு உட்பட உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. புதருக்குள் உயிருக்கு போராடி முனங்கிய சிறுவனை மீட்ட பொதுமக்கள், சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். Porn Hub Announcement: ஆபாச படங்கள் பார்க்க இனி இந்த விஷயம் அவசியம் – பார்ன் ஹப் அதிரடி அறிவிப்பு.!

பெற்றோர் சிறுவனை அழைத்து போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவமனைக்கு சிறுவன் அழைத்து செல்லப்பட்டார். இதுகுறித்து போடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை வாலிபரின் மூலமாகவே சிறுவன் மரணப்படுக்கையில் இருக்கும் நிலையில், அப்பகுதியில் மது மற்றும் கஞ்சா விற்பனை என்பது 24 மணிநேரமும் நடைபெறுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. போதையில் அதிவேகத்தில் வாகனத்தை இயக்கி அப்பாவி உயிர்களை பல வாகன ஓட்டிகள் கேள்விக்குறியாக்குவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சிறுவனை ஈவு இரக்கமின்றி இழுத்து சென்ற வாகன ஓட்டியை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.