ஆகஸ்ட் 29, பழனிசெட்டிபட்டி (Theni News): தேனி (Theni) மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிபட்டி, ஆஞ்சநேயர் நகர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் பாண்டியன். இவரின் மனைவி உமா மகேஸ்வரி. தம்பதிகளுக்கு 16 வயதுடைய மகளும், 8 வயது மகனும் இருக்கின்றனர்.
வேணுகோபால் பழைய இரும்பு வியாபாரம் செய்து வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு 08 மணிக்கு மேல், சாலையில் பலத்த காயத்தோடு உயிருக்கு போராடி இருக்கிறார்.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தவறி விழுந்து அடிபட்டு இருக்கலாம் என எண்ணி, அவசர ஊர்தி உதவியுடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், தலையில் 10 இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது உறுதியானது. மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். Janhvi Kapoor visited Tirupati: அடையாளம் காண முடியாத பாரம்பரிய தோற்றத்தில்: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பாலிவுட் நடிகை..!
சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமிரா வேணுகோபால 3 பேர் கும்பல் பின்தொடர்ந்து உறுதியானது. மேலும், சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனம் நின்றுள்ளது. அந்த வாகனத்தின் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பின் பெரியகுளம் பகுதியை சேர்ந்த முத்துகாமாட்சி @ வாழவந்தான், கண்ணப்பன், செல்வகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், காதல் விவகாரத்தில் சிறுமியின் தந்தையான வேணுகோபாலை கொலை செய்ய நடத்த சதிச்செயல் அம்பலமானது.
வேணுகோபாலின் 16 வயது மகள், அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். அவர் தன்னைவிட 10 வயது அதிகமான வாழவந்தானை காதலித்து இருக்கிறார். இவர்களின் காதல் விவகாரம் வேணுகோபாலுக்கு தெரியவந்துள்ளது.
ஆத்திரத்தில் மகளை சரமாரியாக தாக்கிய வேணுகோபால், வாழவந்தானை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார். மகளை மேற்படி படிக்க அனுமதி தராமல் உறவினர் வீட்டில் தங்கவைத்து இருக்கிறார். காதலனை சந்திக்க விடாமல் தடுக்க, உறவினர்கள் வீடு அவ்வப்போது மாற்றப்பட்டு வந்துள்ளது.
ஆனால், 2கே காதலியோ காதலனுக்கு தனது இருப்பிடத்தை தெரிவித்து, அவருடன் இன்பமாக ஊரைச்சுற்றி வந்துள்ளார். அப்போது, சிறுமி தனது தந்தையை கொலை செய்ய காதலனுக்கு திட்டம் தீட்டி கொடுத்துள்ளார். Accuse Escaped from Prison: 40 அடி உயரமுள்ள மதில் சுவரை இருந்து குதித்து தப்பி சென்ற கைதி; கால் உடைந்தது தான் மிச்சம்.. பின்னர் நடந்தது இதுதான்.!
தங்களின் திட்டப்படி, உங்களின் (பெற்றோர்) விருப்பப்படியே நடக்கிறேன் என தந்தை வேணுகோபாலிடம் மகள் முறையிட்டதால், மகளின் எதிர்காலம்கருதி தந்தையும் 11ம் வகுப்பு படிக்க பள்ளியில் சேர்த்து விட்டுள்ளார்.
சம்பவத்தன்று தந்தையை சாக்ஸ் வாங்க வேண்டும் என கடைக்கு அனுப்பிவிட்டு, காதலன் வாழவந்தானுக்கு தொடர்பு கொண்டு கொலை திட்டத்தை அரங்கேற்ற உத்தரவிட்டுள்ளார். வாழவந்தான் தனது நண்பர்களுடன் கொலை முயற்சி திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.
உண்மை அனைத்தும் அம்பலமானதை தொடர்ந்து 16 வயது சிறுமி, அவரின் காதலர் வாழவந்தான், வாழவந்தானின் கூட்டாளிகள் 2 பேர் என 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.