3 People Drowned in Viluppuram (Photo Credit: @News18TamilNadu X)

மே 21, விழுப்புரம் (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசூர் பகுதியில் மலட்டாற்றில் 3 பேர் குளிக்க சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக 3 பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள், 3 பேருக்கும் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. Salem News: நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை? தோட்டத்தில் சடலம்.. சேலத்தில் பேரதிர்ச்சி.!

3 பேர் நீரில் மூழ்கி பலி:

இதுதொடர்பாக, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் (Child Death) அரசூரைச் சேர்ந்த சிவசங்கிரி (வயது 20), அபிநயா (வயது 15) மற்றும் தட்டம்பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 15) ஆகிய 3 பேர் என அடையாளம் காணப்பட்டது. இதில் சிவசங்கிரி, அபிநயா ஆகிய இருவரும் உடன் பிறந்த சகோதரிகள் ஆவர். இவர்களின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.