Salem Old Lady Murder Case on 21 May 2025 (Photo Credit: YouTube / Pixabay)

மே 21, காடையாம்பட்டி (Salem News Today): சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி, சின்னேரிப்பேடு பகுதியில் வசித்து வருபவர் கனகராஜ். இவரின் மனைவி சரஸ்வதி (வயது 68). தம்பதிகளுக்கு ராஜா, முருகானந்தம் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கனகராஜ் உயிரிழந்துவிட்ட நிலையில், தற்போது சரஸ்வதி தனது மகன்களுடன் வசித்து வருகிறார். ஆடு-மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வந்த மூதாட்டி சரஸ்வதி, நேற்று கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். Sivaganga News: கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து; 5 பேர் பலியான சோகம்..!

தோட்டத்தில் சடலம்:

நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு வராத நிலையில், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி அலைந்துள்ளனர். இதனிடையே, மூதாட்டி தனது தோட்டத்தில் பலத்த ரத்த காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டார். மூதாட்டியை அடித்து கொலை செய்தது போன்று ஆடைகளும் களைந்து கிடந்துள்ளன. அவரது கழுத்து, காதுகளில் இருந்த தங்க செயின் மற்றும் கம்மல் போன்றவை திருடப்பட்டு இருந்தன.

காவல்துறை விசாரணை:

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாரா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தான் ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தின் தோட்டத்து வீடுகளில் நடந்த கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேலத்தில் மூதாட்டி தோட்டத்தில் கொல்லப்பட்டுள்ள செய்தி தமிழக அளவில் மீண்டும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.