Ranipet Murder Case (Photo Credit: YouTube)

மே 15, ராணிப்பேட்டை (Ranipet News): ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி புவனேஸ்வரி, விஜய் என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு (Family Dispute) ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல், நேற்று இரவும் தகராறு ஏற்பட்ட நிலையில், பாலுவை பிரிந்த புவனேஸ்வரி கீழ்புதுப்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வாலிபருக்கு அடி, உதை..!

3 பேர் கொடூர கொலை:

இதனால் மிகவும் மன விரக்தியில் இருந்த பாலு, தனது மாமியார் பாரதி, விஜயின் தந்தை அண்ணாமலை, ராஜேஸ்வரி ஆகிய 3 பேரை ஒரே இரவில் கொலை செய்துள்ளார். இதுகுறித்து, 3 பேரையும் கொடூரமாக கொலை (Murder) செய்த பாலுவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளத்தொடர்பு பிரச்சனை காரணமாக கணவர் வெறிச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.