ஆகஸ்ட் 27, திருநெல்வேலி (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில மாதமாகவே அதிகரித்து வரும் வன்முறை காரணமாக, ஒரே மாதத்தில் 20-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நாங்குநேரி பகுதியில் பள்ளியில் எழுந்த சாதிய பிரச்சனையில், அரிவாள் வெட்டு சம்பவம் நடந்தது.
சென்னையில் கல்லூரி & பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த சமீபத்திய பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இவை தொடர்பான பதற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில், குறிப்பாக தென்மாவட்டத்தில் முக்கிய மாவட்டமாக கருதப்படும் திருநெல்வேலி, தூத்துகுடிக்குள் கடந்த பல ஆண்டுகளாகவே நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் என்பது இருந்து வருகிறது.
குற்றவாளியை பிடிக்க சென்ற காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இருந்து, பல்வேறு சூழ்நிலையில் அங்கு வெடிகுண்டு வீசும் செயல்கள் அரங்கேறி தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்திருக்கின்றன. இந்நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் இளைஞர்கள் நாட்டு வெடிகுண்டை வாங்கி வயல்வெளி பகுதியில் வீசி வெடிக்கவைத்த வீடியோ வெளியாகி வைரலானது.
இந்த வீடியோ குறித்து நெல்லை நகர காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சர்ச்சை செயலில் ஈடுபட்ட அரசன் நகரை சேர்ந்த ரஞ்சித் (வயது 19), ஆசாத் நகரை சேர்ந்த முகமது தௌபீக் (வயது 23), சல்மான் (வயது 28) ஆகியோர் இச்செயலில் ஈடுபட்டது உறுதியானது. MP Shocker: கற்பழிப்பு புகார் அளித்த பெண்ணை ஜாமின் பெற்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி; அதிரவைக்கும் பகீர் சம்பவம்.!
இவர்களின் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த காவல் துறையினர், ரஞ்சித் மற்றும் முகமது தௌபீக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான சல்மான் தேடப்பட்டு வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தபோது பகீர் உண்மையும் தெரியவந்தது.
அதாவது, நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிப்பது நடந்து வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தும்போதே, சம்பந்தப்பட்ட நபர்களால் எடுக்கப்பட்ட விடியோவும் வெளியாகி இருக்கிறது. இதன்பேரில் மூவரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் கோவில் திருவிழாவில் வெடிவெடிக்கும் தொழில் செய்துவந்த சல்மான், தனது நண்பர்களுடன் சேர்ந்து யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து சோதனை செய்தது தெரியவந்துள்ளது என்பது உறுதியானது. இளைஞர்கள் இவ்வாறான சர்ச்சை செயலில் ஈடுபடுவது அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு வெடிகுண்டு தயாரித்து வயல் வெளியில் சோதனை செய்த நெல்லை இளைஞர்கள் ரஞ்சித் (19), முகமது தௌபீக் (23) கைது..
முக்கிய குற்றவாளி சல்மானுக்கு அதிகாரிகள் வலைவீச்சு..
நாட்டு வெடிகுண்டுகளை இளைஞர்கள் தயாரிப்பது அதிர்ச்சியை தருகிறது. #Tirunelveli | #LatestLY_Tamil pic.twitter.com/aY7jTMkOf5
— Sriramrpckanna (@Sriramrpckanna1) August 27, 2023