ஜூலை 17, திருப்பூர் (Tiruppur News): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர், பெருமாநல்லூர் சாலையில் கஞ்சா போதையில் இருந்த நபர்கள் அரசு பள்ளி மாணவர்களிடம் தகராறு செய்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பகிர்ந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, "அரசுப் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா போதையிலிருந்த நபர்கள் தகராறு செய்து, பள்ளி மாணவர்களை அரிவாளால் வெட்டத் துரத்திச் செல்லும் காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பெருகியிருக்கும் போதைப் பொருள்கள் புழக்கத்தால், தமிழகம் முழுவதுமே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கும் நிலையில், தற்போது, பள்ளி செல்லும் குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அவல நிலையில் தமிழகம் இருப்பது வெட்கக்கேடு. உடனடியாக, மாணவர்களை வெட்ட முயன்ற சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும், பொது இடங்களில் போதையில் இருப்பவர்களால் பிரச்சினை ஏற்படாமல் கண்காணிக்க, காவல்துறை ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளின் அருகே, போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார். பள்ளி வகுப்பறையில் நேர்ந்த சோகம்.. 9 வயது சிறுமி மாரடைப்பால் சரிந்து விழுந்து மரணம்.. கண்ணீரில் பெற்றோர்.!
மாணவர்களை கஞ்சா போதை கும்பல் வெட்ட துரத்திய காணொளி :
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த குன்னத்தூர், பெருமாநல்லூர் சாலையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா போதையிலிருந்த நபர்கள் தகராறு செய்து, பள்ளி மாணவர்களை அரிவாளால் வெட்டத் துரத்திச் செல்லும் காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
பெருகியிருக்கும் போதைப் பொருள்கள்… pic.twitter.com/xTU1QMRDwO
— K.Annamalai (@annamalai_k) July 17, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)