Gold Silver Price (Photo Credit: Pixabay)

டிசம்பர் 27, சென்னை (Chennai News): இந்தியாவில் தங்கத்தின் மீதான நுகர்வு, மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக விலை உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு, நாடுகளுக்கு இடையேயான போர், பதற்ற சூழ்நிலை காரணமாகவும், தங்கத்தின் விலை என்பது கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. Chennai Shocker: 26 வயது இளம்பெண் பலாத்கார முயற்சி; போதகரின் அதிர்ச்சிதரும் செயல்.. பதறவைக்கும் தகவல்.! 

இன்றைய தங்கம் விலை (Today Gold Price In Chennai):

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரன் ரூ.57,000 க்கும், கிராம் ரூ.7,125 க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,00,000 க்கு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.57,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து, கிராம் தங்கம் விலை ரூ.7,150 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில், வெள்ளியின் விலை மாற்றம் இல்லாமல், கிலோவுக்கு ரூ.1,00,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.