Gold Silver Price (Photo Credit: Pixabay)

ஜனவரி 16, சென்னை (Chennai News): இந்தியாவில் தங்கத்தின் மீதான நுகர்வு, மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக விலை உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு, நாடுகளுக்கு இடையேயான போர், பதற்ற சூழ்நிலை காரணமாகவும், தங்கத்தின் விலை என்பது கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. Kamal Haasan: நாட்டின் இழிவை வென்றெடுத்த விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள்: மநீம தலைவர் கமல் ஹாசன்.! 

இன்றைய தங்கம் விலை (Today Gold Price in Chennai):

இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை எப்படி இருந்தாலும், மக்கள் அதனை வாங்கி குவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, இன்று ரூ.7,390 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.59,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோ ரூ.1,01,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை ரூ.60 ஆயிரத்தை கடந்துவிடுமோ என்ற அச்சம் இல்லத்தரசிகளுக்கும், நகை பிரியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.