செப்டம்பர் 23, சென்னை (Chennai News): மத்திய அரசு இலவச சிலிண்டர் வழங்குவதாக அறிவித்துள்ளது. நயினார் நாகேந்திரன் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லி சென்றுள்ளார். திமுக தலைவர் & முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. அமெரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அசாம் பாடகருக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இனி விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
இலவச எரிவாயு விநியோகம் (Free LPG Cylinders):
மத்திய அரசு ஏழை-எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வரும் நிலையில், தற்போது 25 லட்சம் புதிய இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்குவுள்ளதாக அறிவித்துள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் புதிதாக 25 லட்சம் பயனர்கள் பயனடையும் வகையில், இந்த இலவச இணைப்புகளை கொடுக்க முன்வந்துள்ள மத்திய அரசு திட்டத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை நவராத்திரியை ஒட்டி மத்திய அமைச்சர் ஹர்த்திப் சிங் பூரி தெரிவித்துள்ளார். Chennai One App: பேருந்து, மெட்ரோ, ஆட்டோவில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்.. சென்னை ஒன் ஆப் அறிமுகம்.. அசத்தல் தகவல் இதோ.!
டெல்லியில் மாநில பாஜக தலைவர் (TN BJP President Nainar Nagendran Delhi Visit):
2026 தேர்தலை மையப்படுத்தி தமிழக அரசியல்களம் அனல் பறக்கும் நிலையில், தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவுடன் சந்தித்துள்ளார். மத்திய அமைச்சர் & பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவுடன் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுக எம்பிக்கள் கூட்டம் (DMK Party MP's Meeting):
திமுக தலைவர் & தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணி அளவில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அடுத்தகட்டமான மாநில தேர்தலுக்கான வியூகம் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாடுகளில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரலாறு காணாத உச்சம்.. ஒரே நாளில் ரூ.1,680 உயர்ந்து ரூ.83,000ஐ கடந்த தங்கம் விலை.. தங்கப்பிரியர்களுக்கு பேரிடி.!
இந்தியா - அமெரிக்கா பிரச்சனை குறித்து விவாதம் (India United States Issue):
இந்தியா - அமெரிக்கா இடையேயான வணிகப் போர் ஒவ்வொரு கட்டத்திலும் புதிய பிரச்சினையை ஏற்படுத்தும் நிலையில், சமீபத்தில் எச்1பி விசாவுக்கு கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதனிடையே ஐநா சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க அமைச்சருடன் சந்திப்பு நடத்துகிறார். இந்த சந்திப்பில் வரி, எச்1பி விசா விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அசாம் பாடகர் மறைவு: கின்னஸ் சாதனை:
பிரபல அசாம் பாடகர் ஜூபின் கார்க் செப்டம்பர் 19ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் ஸ்கூபா டிரைவிங் செய்யும் போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் அசாமி, ஹிந்தி, வங்காள மொழிகளில் 38,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். இதனால் மக்களின் பேரன்பையும் பெற்றவராக இருக்கிறார். அவரது இறப்புக்கு பின் சொந்த மாநிலமான அசாமுக்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டு, நேற்று கவுகாத்தியில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அவரது இறுதி மரியாதை நிகழ்ச்சிக்கு சுமார் 4 கிலோ மீட்டர் வரை மக்கள் வரிசையில் நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனால் இறுதிச் சடங்குக்கு அதிக மக்கள் கூடி வந்த பிரபலங்களின் பட்டியலில், நான்காவது இடத்தை பிடித்து அவர் சாதனையும் படைத்துள்ளார்.