Dowry Death Issue Representational File Picture (Photo Credit PTI)

மே 12, காட்டூர் (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர், ராஜேஸ்வரி நகரில் வசித்து வருபவர் சாய் வினோத். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதரையநல்லூர் மாதா கோவில் பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரின் மகள் மகாதேவி (வயது 25). தம்பதிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது.

திருமணத்தின்போதே பெண்வீட்டார் சார்பில் வரதட்சணையாக நகை மற்றும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. புதுமண தம்பதிகள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இதற்கிடையில், கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு எழுந்து வந்துள்ளது. Madurai Rains: தொடர் மழை, பலத்த காற்று எதிரொலி.. கோழிப்பண்ணை இடிந்து விழுந்து 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் பலி.!

இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு சென்ற மகாதேவி, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்ட உறவினர்கள், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனின்றி மகாதேவி பரிதாபமாக இன்று உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக மாதேவியின் தாயார் நல்லதங்காள் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த புகாரில், மருமகன் வினோத் மகளிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்தார். அவர் எனது மகளை துன்புறுத்தவும் செய்தார். இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என கூறியுள்ளார். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.