ஏப்ரல் 01, முசிறி (TRICHY NEWS): திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி (Musuri, Trichy), திருக்கலையூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது இளைஞர், அங்குள்ள கண்ணனூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் டிப்ளோமா பயின்று வந்துள்ளார்.
கண்ணனூரை அடுத்த த.பளூரை சேர்ந்த சிறுமி யுவபாரதி (வயது 15). இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமிக்கும் - கல்லூரி மாணவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக (Love) மாறியுள்ளது.
இந்த காதல் விவகாரத்தை அறிந்த சிறுமியின் தாய், மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது சார்பில் சில உறவினர்களை அழைத்துக்கொண்டு இளைஞனின் ஊர் தலையாளிகளிடம் விஷயத்தை தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அப்போது, எனது மகள் படிக்க வேண்டும் என்பதால், இவ்வயதில் குறிப்பிட்ட இளைஞர் காதல் போர்வையில் தனது மகளை சந்திக்க கூடாது என பேசப்பட்டுள்ளது. இளைஞரும் தனது சம்மதத்தை தெரிவித்துள்ளர். Kyndryl Layoff: எண்ணிலடங்காத பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்த கயண்டர்ல் நிறுவனம்..!
கடந்த 5 மாதமாக இருவரும் பிரிந்து இருந்த நிலையில், கடந்த மார்ச் 28ம் தேதி யுவபாரதியின் பிறந்தநாளையொட்டி இளைஞர் இருவரும் சேர்ந்து நின்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த யுவபாரதியின் தாயார் மகளிடம் விசாரிக்க, சிறுமி எனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். கடந்த 29ம் தேதி வீட்டில் தனியே இருந்த சிறுமி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி மறுநாளில் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து சிறுமியின் தாயார் சுபாஷினி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், விசாரணை நடந்து வருகிறது.