School Girl Dies in Tiruvannamalai (Photo Credit: YouTube)

ஏப்ரல் 01, ஆரணி (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சதுப்பேரி பாளையத்தில் சேர்ந்தவர்கள் மோனிஷா (வயது 15), சிவரஞ்சனி (வயது 15). இவர்கள் இருவரும், ஆரணி அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு ஆங்கில மொழி பொதுத்தேர்விற்கு, இவர்கள் இருவர் உட்பட 4 மாணவிகள் ஒன்றாக வீட்டில் படித்துள்ளனர். TNPSC Group 1 Exam Date 2025: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியீடு.. முழு விவரம் உள்ளே..!

கிணற்றில் மூழ்கி பலி:

இதனையடுத்து, வெளியே சென்று படிக்கலாம் என்று, வெளியே உள்ள கிணறு (Well) அருகே அமர்ந்து படித்துள்ளனர். அப்போது, மோனிஷா மற்றும் சிவரஞ்சனி ஆகிய இருவரும் நீச்சல் கற்றுக்கொள்வதற்காக கிணற்றில் இறங்கியுள்ளனர். அப்போது, சேற்றில் சிக்கி இருவரும் வெளியே வர முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இருவர் பலியான சோகம்:

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றில் சிக்கி உயிரிழந்த மாணவிகளை மீட்டனர். இவர்களது உடல் ஆரணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.