
மார்ச் 16, திருச்செந்தூர் (Tiruchendur News): தூத்துக்குடி (Thoothukudi News) மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் (Thiruchendur), ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் (Arulmigu Subramania Swamy Temple), முருகனின் அறுபடை வீடுகளில், இரண்டாவது ஒன்று ஆகும். ஒவ்வொரு வார இறுதி மற்றும் பண்டிகை நாட்களில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் பல்லாயிரக்கணக்கில் அலைமோதும். இதனிடையே, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் வசித்து வருபவர் ஓம் குமார் (வயது 50). இவர் முருகபக்தர் ஆவார். தனது குடும்பத்துடன் நேற்று திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்திருந்தார். Coimbatore Shocker: 1 வயது குழந்தை ரூ.1 இலட்சத்துக்கு விற்பனை; கள்ளக்காதலில் பிறந்த குழந்தையால் தாய் விபரீதம்.!
மயங்கி விழுந்தார்:
இன்று காலை நேரத்தில், அவர் முருகனை தரிசனம் செய்ய ரூ.100 கட்டண தரிசன வரிசையில் நின்றுகொண்டு இருந்தார். அச்சமயம், திடீரென மூர்ச்சையாகி மயங்கி விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக அவசர ஊர்தியினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்த அதிகாரிகள், அவசர ஊர்தியை விரைந்து அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட ஓம் குமார், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். வானிலை: ஒருசில இடங்களில் கொளுத்தி எடுக்கப்போகும் வெயில்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
மூச்சுத்திணறல் மரணம்:
அங்கு ஓம் குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த திருச்செந்தூர் காவல்துறையினர், ஓம் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் மரணித்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்தில் முருகனை தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர் மரணித்து, குடும்பத்தினர் மற்றும் அங்கிருந்த மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.