12th Board Exam Result: 600/599 மதிப்பெண்கள் பெற்று சாதனை.. மளிகை கடைக்காரரின் மகன் மாநில அளவில் முதலிடம்..!

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், பழனியை சேர்ந்த மாணவியும், திருப்பூரை சேர்ந்த மாணவரும், 600/599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

12th Board Exam Result: 600/599 மதிப்பெண்கள் பெற்று சாதனை.. மளிகை கடைக்காரரின் மகன் மாநில அளவில் முதலிடம்..!
12th Exam First Mark Student Ragul (Photo Credit: YouTube)

மே 08, பல்லடம் (Tiruppur News): தமிழகத்தில் மார்ச் 03ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் (12th Exam Results 2025) மே 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர், மே 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று (மே 08) காலை 9 மணியளவில் பள்ளிக்கல்வித்துறையின் tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய பக்கத்தில் வெளியானது. தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் வரை மொத்த தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில், மாணவிகள் 96.70 சதவீதமும், மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இம்முறையும் மாணவிகள் தான் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12th Board Exam Result: +2 பொதுத் தேர்வில் 600/599 மதிப்பெண்கள்.. மாநில அளவில் முதலிடம்.., சாதனை படைத்த மாணவி..!

இருவர் முதலிடம்:

இந்நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பழனியை சேர்ந்த மாணவி ஓவியஞ்சலி, ஆங்கில பாடத்தை தவிர பிற அனைத்து பாடங்களிலும் 100/100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அதன்படி 600க்கு 599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதேபோன்று, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த மளிகை கடைக்காரரின் மகனான ராகுல் என்ற மாணவர், 600க்கு 599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார. மேலும். ஒரு மாணவர் மற்றும் மாணவி என இருவரும் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on May 08, 2025 03:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).