ஜனவரி 07, புதுடெல்லி (New Delhi): இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி (MS Dhoni). கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழும் தோனி தனது ரசிகர்களால் தல, மிஸ்டர் கூல் என்று பல்வேறு புனை பெயர்களால் அழைக்கப்படுகிறார். இந்திய அணியின் சரித்திர சாதனைகளுக்கு காரணமாக இருந்த நாயகனுக்கு, இந்தியாவை கடந்தும் கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளம்.
உலகளவில் ரசிகர்களை பெற்றவர்: ஏனெனில் அவரின் விளையாட்டு திறமை, அதன் மீதான அர்ப்பணிப்பு உணர்வு போன்றவை அதற்கு அடையாளம் ஆகும். இவர் மது மற்றும் புகை போன்ற விஷயங்களுக்கு எதிரான நபர் ஆவார். இதனிடையே, தற்போது தோனியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தோனி ஹுக்கா என்ற போதை வஸ்துவை புகைக்கும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. Shree Ram Ghar Aaye: ஸ்ரீ ராமர் வீட்டிற்கு வருகிறார் பாடல் உணர்ச்சிகரமானது: மனம் நெகிழ்ந்து பாராட்டிய பிரதமர் மோடி.!
ஹுக்கா புகைத்த தோனி?: இந்த வீடியோவில் இருப்பது உண்மையில் தோனியா? அல்லது எடிட்டிங் செய்யப்பட்டதா? என்பது குறித்த விபரம் இல்லை. ஆனால், அதனை பதிவிட்டுள்ள எக்ஸ் பக்கத்தின் பயனாளர் ஒருவர், தோனி புகைக்கு எதிராக இருப்பது பலருக்கும் பரிட்சயமான விஷயம். ஆனால், அவர் ஹுக்கா புகைக்கிறார் என பதிவிட்டுள்ளார். இந்த அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. உண்மைத்தன்மை விசாரிக்கப்பட்டு வருகிறது.
Influential thala😭 pic.twitter.com/qJlYCApxzJ
— 𝙆𝙐𝙉𝘼𝙇/𝙁𝘼𝙍𝙄𝘿 𝙆𝙄 𝙈𝙆𝘽 (@BholiSaab18) January 6, 2024