Vikravandi Murder Accuse Kesavan (Photo Credit: Facebook / Pixabay)

டிசம்பர் 26, விக்கிரவாண்டி (Viluppuram Crime News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி, வேலியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவரின் மகள் கௌசல்யா. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பாடி பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது 25). கௌசல்யாவுக்கும் - கேசவனுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மாறியுள்ளது.

காதல் திருமணம், மகிழ்ச்சியான வாழ்க்கை: இதனையடுத்து, காதல் ஜோடி உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னர் தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இருவரின் அன்புக்கு அடையாளமாக தனுஷ்குமார் என்ற 4 வயதுடைய மகனும், ஜென்விஷா என்ற ஒரு வயதுடைய மகளும் பிள்ளைகளாக இருக்கின்றனர்.

மதுபோதைக்கு அடிமையான கணவன்: இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக நடந்து வந்த நிலையில், கேசவன் குடிபோதைக்கு அடிமையாகி இருக்கிறார். சரிவர வேலைக்கும் செல்லாமல், வீட்டு செலவுகளுக்கும் பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் தம்பதியடையே அவ்வப்போது குடும்பச்சண்டை நடந்துள்ளது. சம்பவத்தன்றும் அதேபோல சண்டை நடக்க, கௌசல்யா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். Jewels Theft From Temple: அம்மன் கோவிலில், சாமி நகைகளை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்த மர்ம ஆசாமி; சிசிடிவி கேமிராவில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்.! 

தாய் வீடு வந்த மகள்: ஆத்திரத்தில் தாய் வீடு சென்ற மனைவி & குழந்தைகளை தன்னுடன் அழைத்துச்செல்ல கேசவன் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு மீண்டும் வீட்டிற்கு வரும்படி கௌசல்யாவை அழைக்க, அவர் தனது கணவருடன் வாக்குவாதம் செய்து, குடித்தனம் நடத்த வர இயலாது என கூறியுள்ளார். இதனால் வீட்டில் இருந்த குழந்தையை அழைத்துக்கொண்டு கேசவன் புறப்பட்டதாக கூறப்படுகிறது.

மண்டை பிளந்து மரணம்: இதனைக்கண்ட குடும்பத்தினர் கேசவனை தடுத்துள்ளனர். ஆறுமுகமும் சண்டையிட்டு இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கேசவன், அருகில் இருந்த கட்டையை எடுத்து மாமனார் ஆறுமுகத்தின் தலையில் ஓங்கி 4 முறை தாக்கி இருக்கிறார். இதனால் நிகழ்விடத்திலேயே மண்டை ஓடு பிளந்து, மூளை வெளியேறி இரத்த வெள்ளத்தில் ஆறுமுகம் சரிந்துள்ளார். Nigeria Civilians Killed: தாயின் முதுகில் கதறும் குழந்தையின் அழுகுரல்; கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட 160 பேர்.. நைஜீரியாவில் நடந்த பயங்கரம்.! 

கைது செய்யப்பட்ட மருமகன்: அவரை மீட்ட குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற நிலையில், அங்கு அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த விக்கிரவாண்டி காவல் துறையினர், கேசவனின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கேசவனிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் ஆறுமுகத்தின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.