![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/01/Virudhunagar-Prostitution-AIADMK-Supporter-Accuse-with-Husband-Visuals-from-Spot-380x214.jpg)
ஜனவரி 31: விருதுநகரில் (Virudhunagar) உள்ள கொல்லர் தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகரன் (வயது 42). இவரின் மனைவி அமல் ராணி, விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் மகளிரணி துணைத்தலைவியாக (AIADMK Women's Team) பதவி வகித்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தம்பதி விருதுநகர் பேராலி சாலை ஐ.டி.பி காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினர்.
இதற்கிடையில், அந்த வீட்டிற்கு ஆண்கள் அவ்வப்போது வந்து சென்றது அக்கம் பக்கத்தினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்திரசேகரன் சம்பந்தப்பட்ட பகுதியில் பாலியல் தொழில் நடத்தி வருவதாகவும் விருதுநகர் காவல் துறையினருக்கும் (Virudhunagar Rural Police Station) ரகசிய தகவல் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் நடத்திய சோதனையில், வீட்டில் இருந்த அறையில் ஆணும்-பெண்ணும் (Couple) தனிமையில் இருந்துள்ளனர். இவர்களிடம் அங்கு வைத்தே விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், இளைஞர் சிவகாசியை சேர்ந்த ஹரி பாலகுமார் (வயது 24) என்பது தெரியவந்தது. Tenkasi Married Girl Kidnap Issue: தென்காசி காதல் திருமண ஜோடி பெண் வீட்டாரால் கடத்தப்பட்ட விவகாரம்.. எஸ்.பி-க்கு டோஸ் விட்ட டி.ஜி.பி.!
அவருடன் இருந்த இளம்பெண் சாத்தூரை (Sathur, Virudhunagar) சேர்ந்தவர். இருவரும் முன்னுக்கு பின் முரணாக முதலில் பதிலளித்து, பின்னர் வீட்டில் விபச்சார தொழில் (Prostitution) நடப்பதை உறுதி செய்தனர். அவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் பேரில் சந்திரசேகரன், அமல்ராணி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், தம்பதிகள் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருமானம் பார்த்து வந்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட மூவரின் மீதம் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சந்திரசேகரன், அமல்ராணி, ஹரிபாலகுமார் ஆகியோரை சிறையில் அடைத்தனர்.