Rajapalayam Railway Station | Suicide Representational (Photo Credit: India Rail Info / Pixabay)

மே 24, இராஜபாளையம் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் (Rajapalayam, Virudhunagar), தேவதானம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் வெல்டிங் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். முத்துக்குமாரின் மனைவி ராமுத்தாய் (வயது 30). தம்பதிகளுக்கு நிஷா (வயது 6) என்ற மகளும், அர்ச்சனா தேவி (வயது 3) என்ற மகளும் இருக்கின்றனர்.

கடந்த மே 20ம் தேதி அன்று காலையில் முத்துக்குமார் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்தபோது மனைவி செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதுகுறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், கணவர் முத்துக்குமார் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு திட்டியதாக தெரியவருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராமுத்தாய், தனது குழந்தைகளோடு சம்பவத்தன்று வீட்டில் இருந்து மாயமாகிவிட்டார். ஆத்திரத்தில் இருந்த முத்துக்குமாரும், மனைவி தனது குழந்தைகளோடு அவரின் தாய் வீட்டிற்கு சென்றிருப்பார் என எண்ணியுள்ளார். Chennai Water Company: தரமில்லாத தண்ணீர் கேன் நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்; தலைவர் பார்ப்பார் என கொக்கரித்த வி.சி.க பிரமுகர்.!

2 நாட்கள் கழித்து மனைவி எந்த விதமான தொடர்பும் கொள்ளவில்லையே என அவரின் தந்தை தங்கசாமிக்கு தொடர்பு கொண்டு குழந்தைகள் அங்கு உள்ளனரா? என விசாரித்துள்ளார். நிலைமையை புரிந்துகொண்ட தங்கசாமி, வீட்டிலில் நடந்தவற்றை கேட்டறிந்துள்ளார்.

இதனையடுத்து, இருதரப்பு குடும்பத்தாரும் ராமுத்தாயை தேடி இருக்கின்றனர். இதனிடையே, இன்று தேவதானம் பகுதியை சேர்ந்த முத்து மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் ராமுத்தாய் மற்றும் அவரின் குழந்தைகள் இருவரும் சடலமாக கிடந்துள்ளனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டனர். சேத்தூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்தது. விசாரணையில், கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டதால், பெண்மணி குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. விசாரணை தொடருகிறது.