Representative Image | Death (Photo Credit: PTI)

ஜனவரி 18, கூமாபட்டி: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு (Watrap, Srivilliputhur) அத்திக்கோவில் கிராமம், மலைவாழ்மக்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் வனராஜ் (வயது 50). இவர் மலையடிவாரத்தில் இருக்கும் தோட்டத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

வனராஜுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட நிலையில், மூன்றாவதாக கணவரை பிரிந்து 2 மகள்களுடன் வாழ்ந்து வந்த உமா என்ற பெண்மணியை திருமணம் செய்துள்ளார். இவருடன் தோட்டத்திலேயே வனராஜ் குடித்தனமும் நடத்தி வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் உமாவின் குழந்தைகள் உறங்கியபின், தோட்டத்தில் உள்ள மோட்டார் ரூமின் மாடியில் உல்லாசமாக இருப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவில் குழந்தைகள் உறங்கியபின் இருவரும் மோட்டார் ரூமுக்கு சென்றுள்ளனர். Governor Palace Declare Tamilnadu Issue: தமிழ்நாடா? தமிழகமா?.. “சொல்வதை புரிஞ்சிக்காம பிரச்சனை பண்ணிடீங்களே” – பரபரப்பு அறிக்கை கொடுத்த ஆளுநர்..!

அங்கு இருவரும் மதுபானம் அருந்திவிட்டு உல்லாசமாக இருந்த நிலையில், மறுநாள் காலையில் உமா இரத்த வெள்ளத்தில் மிதந்து (Women Died During Sexual Intercourse With Husband Both Drunks Alcohol) உயிரிழந்து பிணமாக இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கூமாபட்டி காவல் துறையினர், உமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், "இருவரும் மதுபானம் அருந்திவிட்டு போதையில் உல்லாசமாக இருந்தபோது, வனராஜ் உடலுறவு ஆர்வத்தில் மனைவியின் வயிற்றில் ஓங்கி அடித்ததாக தெரியவருகிறது.

இதனால் அலறித்துடித்த உமா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்" என்பது அம்பலமானது. இதனையடுத்து, வனராஜின் மீது கொலை வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 18, 2023 02:54 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).