Wife Kills Husband in Nilgiris (Photo Credit: YouTube)

பிப்ரவரி 28, பந்தலுார் (Nilgiris News): நீலகிரி மாவட்டம், பந்தலுார் ஹட்டி பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 37). இவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி விமலாராணி (வயது 28). இத்தம்பதிக்கு 8 வயது, 5 வயது, 2 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். விமலாராணி, வேறொரு நபருடன் அடிக்கடி செல்போனில் பேசி கொண்டிருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. Rowdy Murder Case: ரவுடியை கொடூரமாக வெட்டிக் கொன்ற கும்பல்.. பரபரப்பு சம்பவம்..!

தின்னர் திரவத்தை ஊற்றி கணவர் கொலை:

இந்நிலையில், நேற்று முன்தினம் (பிப்ரவரி 26) காலை விமலாராணி, கணவன் முரளியின் கண்களில் பெவிகோல், உடலில் 'தின்னர்' (Paint Thinner) திரவத்தை ஊற்றி, தீ வைத்து எரித்துள்ளார். இதனையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முரளி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மனைவி விமலாராணி திட்டமிட்டு கொலை (Murder) செய்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு, விமலாராணியை காவல்துறையினர் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.