Happy Mattu Pongal 2025 (Photo Credit: @ANI X)

ஜனவரி 15, திட்டக்குடி (Trichy News): கதிரவனுக்கு, பசு-காளைக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகை, உலகத் தமிழர்களால் வெகு-விமர்சையாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது. தைப்பொங்கல் பண்டிகையையைத் தொடர்ந்து, இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவுக்கு வருடம் முழுவதும் உறுதுணையாக இருக்கும் பசு, காளைக்கு நன்றி தெரிவித்து கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கல், கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் தைப்பொங்கலை போல, பசுவுக்காக சிறப்பிக்கப்படுகிறது. Mattu Pongal 2025 Wish in Tamil: உழவனின் நண்பனுக்கு மாட்டுப்பொங்கல்; பொங்கல் வைக்க நல்ல நேரம், வாழ்த்து இதோ.!  

மாட்டுப்பொங்கல் 2025:

மாட்டுப்பொங்கல் 2025 (Mattu Pongal 2025) பண்டிகை 15 ஜனவரி அன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி, திருச்சி ஆகிய நகரங்களில், இன்று காலையே மாட்டுப்பொங்கல் சிறப்பிக்கப்பட்டது. ஒருசில பகுதிகளில் மதியத்திற்கு மேல் காளைகளை சுத்தம் செய்து, மாலை நேரத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள்.

மாட்டுப்பொங்கல் வாழ்த்து இதோ (Mattu Pongal Wish WhatsApp Status in Tamil):

1. புல் கொடுத்தால் பால் கொடுக்கும், ரத்தத்தில் ஒருபாதியை பாலாக பிரித்து வழங்கி மனிதர்களின் நலனை இறுதிநாள் வரை காக்கும் பசுவுக்கு, இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

2. மண்ணில் விழுந்தால் உரமாகவும், காயவைத்து எரித்தால் திருநீறாகவும் சானத்தை கொடுத்து மனிதனையும், மண்ணையும் பாதுகாக்கும் குடும்ப உறுப்பினருக்கு இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

3. உழைத்து களைத்துப்போன உழவருக்கு ஒருநாள் திருவிழா, இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

4. அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

5. பிறந்து ஆறு மாதம் அன்னையிடமும், வாழ்நாள் முழுவதும் உன் மடிப்பாலும் அருந்துகிறோம். மனிதர்களின் இரண்டாம் தாயே, உனக்கு இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

6. குடும்பம் செழிக்க உதவிய கோமாதா, உன்னை வாங்கவே இவ்வொருநாள் பண்டிகையா? ஒவ்வொரு நாளும் நீ என் குழந்தைதான், இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

7. விவசாயியின் தோழனாய், தொண்டனாய், வீரத்தின் அடையாளமாய் திகழும் மாட்டுக்கு நன்றி செலுத்துவோம்! இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

திருநெல்வேலி (Tirunelveli Mattu Pongal 2025) மாவட்டத்தில் உள்ள சிஎன் கிராமத்தில் மாட்டுப்பொங்கல் சிறப்பிப்பு:

திருச்சி மாநகரில் (Trichy Mattu Pongal 2025) மாட்டுப்பொங்கல் 2025 சிறப்பிப்பு: