ஜனவரி 22, புதுடெல்லி (New Delhi): இந்திய மக்களின் மனதில் நீங்காத இடம்பெற்ற சாம்சங் நிறுவனம், கடந்த ஜனவரி 17ம் தேதி முதல் தனது புதிய செயற்கை நுண்ணறிவு திறன் மேம்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்சி எஸ் 24 அல்டரா மற்றும் கேலக்சி எஸ் 24 ப்ளஸ் (Samsung Galaxy S24 Ultra & Galaxy S24+) ஸ்மார்ட்போன்களின் முன்பதிவுகளை தொடங்கியது. சந்தை மதிப்பில் ரூ.22 ஆயிரத்திற்கு மாதத்தவனை செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையிலும் முன்பதிவுகள் தொடங்கி இருக்கின்றன. 5ஜி தொழில்நுட்பத்துடன் சாம்சங் கேலக்சி எஸ்24 ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்லாது உலகிலேயே முதல் முறையாக, தற்போதைய காலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ள செயற்கை நுண்ணறிவு திறனை மேம்படுத்தி வழங்கப்படும் முதல் ஸ்மார்ட்போனாக சாம்சங் அடையாளம் பெற்றுள்ளது.
3 நாட்களில் 2.5 இலட்சம் முன்பதிவுகள்: இதன் வாயிலாக பயனர்கள் நேரடியாக எவ்வித இடையூறும் இன்றி 13 மொழிகளில் உரையாடலாம். இதில் இந்தியாவில் இருந்து ஹிந்தி மொழியும் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான தொழில்நுட்பமும் பதிவு அமைக்கப்பட்டுள்ளது. முன்பதிவுகள் அனைத்தும் நிறைவுபெற்றதும் ஜனவரி 31ம் தேதி முதல் அனைவர்க்கும் சாம்சங் கேலக்சி எஸ்24 அல்டரா மற்றும் கேலக்சி எஸ்24 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கப்பெறும். கடந்த 3 நாட்களில் மட்டும் சாம்சங் கேலக்சி எஸ்24 ஸ்மார்ட்போன்களை வாங்க 2,50,000 இலட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் வாயிலாக மீண்டும் இந்திய செல்போன் விற்பனையில், 2024ம் முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் மீண்டும் தன்னை அரசனாக உயர்த்தி இருக்கிறது. Atal Setu Bridge Accident: அதிவேகத்தால் காத்திருந்த விபத்து; அதிஷ்டத்தால் தப்பிய உயிர்கள்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ.!
சிறப்பம்சங்கள்: சாம்சங் எஸ்24 அல்டரா மாடலில் 1TB RAM - 12GB அமைப்பு கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.1,59,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பாதிப்புகள் உள்ள வரை மட்டுமே. 512GB - 12GB மாடல் ரூ.1,39,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. டைட்டானியம் புளூ, கிறீன், க்ரே, பிளாக், வைலட் ஆகிய நிறங்களில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போனுடன் டேட்டா கேபில், எஜக்ஸன் பின் (Ejection Pin) மட்டுமே வழங்கப்படும். அடாப்டர் தனியாக வாங்க வேண்டும். 3120 x 1440 Quad HD+ 6.8 இன்ச் டிஸ்பிளே, 200 MP + 50 MP + 12 MP + 10 MP கேமிரா, 12 MP செல்பி கேமிரா வழங்கப்பட்டுள்ளது. 5000 mAh பேட்டரி வசதியுடன், 3.39GHz புதுப்பிப்பு திறனும் சேர்க்கப்பட்டுள்ளது. Octa-Core சிபியு இதனை இயக்குகிறது.