ஏப்ரல் 25, சென்னை (Beauty Tips): நம் உடலில் சில பகுதிகளில் கருப்பாக இருக்கின்றது. குறிப்பாக, முழங்கை (Elbow Black) மற்றும் கழுத்தின் பின்புறம் கருப்பாக இருக்கும். நாம் அதை எவ்வளவு நேரம் சுத்தம் செய்தாலும் அந்த கருப்பு மாறாது. இதனை எப்படி நீக்குவது என்பது பற்றியும் மேலும் சரும அழகை எப்படி எளிதான முறையில் பாதுகாப்பது என்பதனையும் இதில் பார்ப்போம். Young Woman Threw Acid On Groom: மாப்பிளை மீது திராவகம் வீசிய சம்பவம்; இளம்பெண் ஆத்திரம்..!

முதலில் ஒரு பாத்திரத்தில், கடலை மாவை தேவையான அளவு எடுத்துக்கொண்டு அதில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சேர்க்கவும். இவை இரண்டையும் ஒன்றாக கலந்து, வெட்டி வைத்த எழுமிச்சையை அதில் நனைத்து அதனை கருப்பாக உள்ள முழங்கை மற்றும் கழுத்து பகுதியில் தேய்க்கவும். பின்னர், 20 நிமிடங்கள் வரை உலரவைக்கவும். இதனையடுத்து, சுத்தமான பருத்தி துணியை தண்ணீரீல் நனைத்து, அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு வாரத்தில் 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும், சரும அழகை பாதுகாக்க 2 தேக்கரண்டி கடலை மாவு, ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள் ஆகிவற்றை தண்ணீர்விட்டு கலந்து முகத்தில் பூச வேண்டும். பிறகு, அரை மணிநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி, சுத்தமான துணியால் துடைக்கவும். இதன்மூலம் சருமம் மென்மையாக காணப்படும். மேலும், குளிக்கும்போது கடலை மாவை தேய்த்து குளித்தால் முகம் பளபளப்பாகும். முகச்சுருக்கம் ஏற்படாமல், இளமையாக வைத்துக்கொள்ளும்.