ஆகஸ்ட் 07, வாஷிங்டன் (World News): அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் லித்தியம்-அயன் பேட்டரியை (Lithium-ion Battery) நாய் ஒன்று கடித்து, வீட்டில் தீயை பற்றவைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஓக்லஹோமா (Oklahoma) நகரத்தில் உள்ள துல்சா பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில், செல்லப்பிராணிகளான (Pets) இரண்டு நாய்கள் மற்றும் ஒரு பூனை இருந்துள்ளது. அதில் நாய் ஒன்று லித்தியம்-அயன் பேட்டரி பேக்கை கடித்துக் கொண்டிருக்கிறது. அப்போது, திடீரென அந்த பேட்டரி வெடித்து (Battery Explosion), வீட்டில் தீ பரவியது. இது வீட்டின் உட்புறத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. Sri Siva Subramaniya Swami Temple: பிஜியில் உள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணியர் சுவாமி கோவிலில் தரிசனம் செய்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு.!
தீயணைப்பு துறையினர் எச்சரிக்கை:
இதுகுறித்து துல்சா தீயணைப்பு துறை அதிகாரி ஆண்டி லிட்டில் தெரிவிக்கையில், வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு அணைத்தனர். இதில், வீட்டில் சிக்கிக் கொண்ட அனைத்து செல்லப்பிராணிகளும் வீட்டில் இருந்த ஒரு கதவு வழியாக தப்பித்துக் கொண்டது. மேலும், இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'லித்தியம்-அயன் பேட்டரிகள் சிறிய இடத்தில் குறிப்பிடத்தக்க அளவு ஆற்றலை சேமிக்கும் திறனுக்காக பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த பேட்டரிகள் மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கு வசதியாக இருந்தாலும், அவை சரியாக பயன்படுத்தாவிட்டால் பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தும்' என்று எச்சரித்தார்.
லித்தியம்-அயன் பேட்டரி பயன்பாடு:
மேலும், லித்தியம்-அயன் பேட்டரிகளைப் பயன்படுத்தும் போது, உற்பத்தியாளர் வழிகாட்டுதல்களின்படி கடைப்பிடிப்பது அவசியமாகும். இதில் அங்கீகரிக்கப்பட்ட சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்தவும். குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு எட்டாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். லித்தியம்-அயன் பேட்டரிகளைப் பயன்படுத்தும் அனைத்து பயனர்களும் விபத்துகளைத் தடுக்க பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்தவுடன், உடனே சார்ஜ் செய்வதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் தேசிய தீ பாதுகாப்பு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
NEW: Dog starts a house fire in Tulsa, Oklahoma after chewing through a portable lithium-ion battery.
The Tulsa Fire Department released the following video to warn people about the "dangers of lithium-ion batteries."
Two dogs and a cat were filmed hanging out before one… pic.twitter.com/skTb8YEzJ6
— Collin Rugg (@CollinRugg) August 6, 2024