ஆகஸ்ட் 07, சுவா (World News): இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு (Droupadi Murmu), 6 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக பிஜி (Fiji), நியூசிலாந்து (New Zealand), திமோர்-லெஸ்டே ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். புதன்கிழமையான இன்று பிஜி நாட்டில் உள்ள சிவா சுப்பிரமணியர் கோவிலில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு செல்வதற்கு முன் பிஜியில் உள்ள இந்திய மக்களிடையே உரையாற்றிய அவர், இந்தியா - பிஜி இடையேயான நட்பு 145 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வருவதை குறிப்பிட்டு தெரிவித்து பாராட்டுகளை கூறினார்.
பொறுப்பான இந்தியா:
தொடர்ந்து பேசிய அவர், "இந்திய சமூகத்தை வெளிநாடுகள் பயணத்தின்போது சந்திப்பது சிறப்பான உணர்வு ஆகும். 145 ஆண்டுகளை கடந்து சிறப்பான மற்றும் நீடித்த பிணைப்பு கொண்ட உறவாக இந்தியா - பிஜி நட்பு தொடருகிறது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் உறவை மேம்படுத்த ஓவர்சீஸ் சிட்டிசன் ஆப் இந்தியா (OCI) எனப்படும் அட்டையை அறிமுகம் செய்தது பாராட்டத்தக்கது. திறமையான, பொறுப்பான இந்தியா உருவாக்கப்பட்டு வருகிறது" என கூறினார்.
பிஜியைத் தொடர்ந்து இரண்டாவ்துகட்டமாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நியூசிலாந்து செல்லவுள்ளார். இன்று முதல் 9ம் தேதி வரை அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், அரசுமுறை ஆலோசனையில் அவர் கலந்துகொள்கிறார். இறுதியாக திமோர் லெஸ்டே நாட்டுக்கு பயணம் செய்து பின் இந்தியா திரும்புகிறார். இந்தியா சார்பில் திமோர் நாட்டுக்கு அரசுமுறை பயணம் என்பது இதுவே முதல் முறையாகும்.
சிவ சுப்பிரமணியர் கோவிலில் வழிபாடு:
#WATCH | Fiji: President Droupadi Murmu offers prayers at Sri Siva Subramaniya Swami Temple, in Nadi. pic.twitter.com/4ltJByleUN
— ANI (@ANI) August 6, 2024