Free Wifi (Photo Credit : Pixabay)

மே 11, புதுடெல்லி (New Delhi): தற்போதைய காலகட்டங்களில் ஆன்லைன் பண பரிவர்த்தனை என்பது மக்களிடையே சாதாரணமாகிவிட்டது. கையில் பணம் எடுத்து செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில், ஆன்லைன் பண பரிவர்த்தனை மற்றும் பிற முக்கிய நடவடிக்கைகளுக்கு பொது வைஃபை நெட்வொர்க்குகளையும் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் திருட்டு அபாயம் :

இந்நிலையில், உணவகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வழங்கப்படும் இலவச வசதிகளை பயன்படுத்துவதால் தனிப்பட்ட மற்றும் நிதி தகவல்களுக்கு அபாயம் ஏற்படுவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது நாம் பொது வைஃபை நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதன் மூலம் நமது தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்கு ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்களுக்கு எளிதாக அமைவதாக கூறப்படுகிறது. Skype Shutting Down: முடிவுக்கு வந்த ஸ்கைப் செயலி.. பயனர்கள் அதிர்ச்சி..! 

மத்திய அரசின் எச்சரிக்கை :

இது குறித்து மத்திய அரசின் இந்திய கணினி அவசர நிலை பதிலளிப்பு குழு வெளியிட்டுள்ள புதிய எச்சரிக்கையில், பொது வைஃபை நெட்வொர்க்குகள் மூலம் ஆன்லைன் ஷாப்பிங், வங்கி பண பரிவர்த்தனை போன்ற முக்கிய செயல்களை செய்ய வேண்டாம் எனவும், சைபர் குற்றவாளிகள் இதுபோன்ற பாதுகாப்பற்ற இணைப்புகளை எளிதில் ஹேக் செய்து விடுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நிதி இழப்பு மோசடி:

மேலும் இதன் காரணமாக தரவுகள் திருட்டு, நிதி இழப்பு, பயனர்களின் தனிப்பட்ட தகவல் திருட்டு உள்ளிட்ட மோசடிக்கு ஆளாக நேரிடும். இது போன்ற பொது வைஃபை நெட்வொர்க்குகளுடன் இணைக்கும் போது பண பரிவர்த்தனைகள் செய்வதையோ அல்லது தங்களது தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுவதையோ தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.