ஆகஸ்ட் 22, சென்னை (Technology News): இந்தியாவின் முன்னணி நகைக்கடையாக கல்யாண் ஜுவல்லர்ஸ் (Kalyan Jewellers) திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனமான ஹைடெல் இன்வெஸ்ட்மெண்ட் (Highdell Investment), தனது 2.36% பங்குகளை நிறுவனத்தின் ப்ரோமோட்டருக்கு ரூ.1,300 கோடிக்கு விற்றுவிட்டு, வெளியேறியுள்ளதாக நேற்று (ஆகஸ்ட் 21) பங்குச்சந்தை சமர்ப்பித்த அறிக்கையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் வெளியிட்டுள்ளது. Hair Dryer Buying Guide: ஹேர் டிரையர் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை.. விபரம் உள்ளே..!
ஹைடெல், தனது 2.42 கோடி பங்குகளை கல்யாண் ஜுவல்லர்ஸ் ப்ரோமோட்டரான (Promoter Group) திருக்குர் சீதாராம் ஐயருக்கு ஒரு பங்கை ரூ. 535 என்ற விலையில் விற்பனை செய்துள்ளது. இது மொத்தம் ரூ.1,300 கோடிக்கு மதிப்புடைய பங்குகளாகும் என்று கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் பிறகு, கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் ப்ரோமோட்டர் மற்றும் ப்ரோமோட்டர் குழுவின் பங்கு இருப்பு இந்நிறுவனத்தில் 60.59 சதவீதத்திலிருந்து 62.95% ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து சரிந்ததைத் தொடர்ந்து இன்று கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் அதிகரித்தது.
கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனப் பங்குகள் வெறும் 365 நாட்களில் மல்டிபேக்கர் என்ற தகுதியை எட்டி கடந்த ஒரு வருடத்தில் 149.56% லாபத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளில், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனப் பங்குகள் 786.97% உயர்ந்துள்ளது. ஜூன் காலாண்டில் நிகர இலாபத்தில் 24% வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ.177 கோடியாக உள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் 26.5% உயர்ந்து ரூ.5,535.5 கோடியாக உள்ளது. நிறுவனம் தனது பங்கு இருப்பை அதிகரிப்பதன் மூலம் தனது ஆன்லைன் வர்த்தக தளமான கேண்டேரை (Candere) பங்குகளை மொத்தமாகக் கைப்பற்றி முழு சொந்த துணை நிறுவனமாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் அறிக்கையில், கல்யாண் ஜுவல்லர்ஸ்க்கு 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிலவரப்படி இந்தியா முழுக்க 277 கடைகள் உள்ளது.