Hair Dryer (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 21, சென்னை (Technology News): அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் தலைமுடி சரியாக உலர்ந்ததா இல்லையா எனப் பாராமல் ரெண்டு உதறு உதறிவிட்டு தலையைக் கட்டிகொண்டு போகும் பெண்கள் ஏராளம். ஈரமாகவே முடி இருந்தால் முடிகளின் வேர்கால்கள் வலுவிழந்து பாதிப்பிற்குள்ளாகும். இதற்கு எளிய முறையில் ஹேர் டிரையர்களைப் பயன்படுத்தலாம். அதிகமாக வெப்பத்தைப் வெளியிடும் ஹேர் டிரையர்கள் (Hair Dryer) பயன்படுத்தினால் முடி உதிர ஆரம்பிக்கும். அதனால் சரியான ஹேர் டிரையர்களைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். ஹேர் டிரையர்களை 2 நிமிடத்திற்கு மேல் ஒரே இடத்தில் பயன்படுத்தக் கூடாது. Is Google Listening to You?: கூகுள் நாம் பேசுவதை ஒட்டு கேட்கிறதா? ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. உடனே இதை ஆப் பண்ணுங்க..!

ஹேர் டிரையர்கள் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை:

  • அதிக எடையுள்ள ஹேர் டிரையர்களை தவிர்ப்பது நல்லது.
  • வேக மற்றும் ஹீட் கட்டுப்பாடு 3 அளவிற்கு குறைவாக இல்லாமல் இருக்க வேண்டும்.
  • ஸ்டைலிங் அட்டேச்மெண்ட்களுடன் வாங்குவது சிறந்தது.

    அளவில் சிறியதாகவும் நீண்ட கேபிள் உடையதாகவும் இருக்க வேண்டும்.

  • ஹீட்டர்கள் விரைவில் சுடாகும் வகையில் உள்ளதா என கவனிக்க வேண்டும்.
  • ஹீட் மற்றும் கூலிங் ஏர் ஆப்ஷன் உள்ளதா எனப் பார்த்து வாங்க வேண்டும். அல்லது உங்களுக்கு தேவையானதை மட்டும் தனியாக வாங்கி பயன்படுத்தலாம்.
  • 1,700 - 1,900 வாட்ஸ் தேவையான ஹேர் டிரையர்களை வாங்கலாம். இது அதிக அடர்த்தியான முடிக்கு ஏற்றதாகும். இதற்கு மேலுள்ளவைகளையும் தேர்வு செய்யலாம்.