ஏப்ரல் 26, சென்னை (Technology News): சீனாவின் மிகப்பெரிய மொபைல்போன் உற்பத்தி நிறுவனமான ரியல்மி, 2024ம் ஆண்டுக்கான தனது தயாரிப்புகளை அதிரடியாக வெளியிட்டு வரவேற்பு பெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரியல்மி நஸ்ரோ 70 ரக ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி ஸ்மார்ட்போன் வழங்கும்பொருட்டு, ரியல்மி சி65 5ஜி (Realme C65 5G Phone) ஸ்மார்ட்போனை இன்று வெளியிட்டுள்ளது.

போட்டித்தமையை உண்டாக்கப்போகும் ரியல்மி: பிளிப்கார்ட் (Flipkart) விற்பனைத்தளத்தில் இன்று மாலை 4 மணிமுதல் ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். நள்ளிரவு வரை சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் ரூ.9,999 க்கு விற்பனை செய்யப்படும் ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போன், இந்திய சந்தையில் மிகப்பெரிய இடத்தை தக்கவைக்கும் முயற்சியுடன் பல சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இது பிற ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் போட்டித்தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது. UFO Captured on Mobile Camera: மொபைல் கேமிராவில் சிக்கிய ஏலியன் வாகனம்; நடுவானில் விமான பயணியை பதறவைத்த சம்பவம்.! 

சி65 5ஜி சிறப்பம்சங்கள்: மீடியாடிக் டி6300 சிப்செட், 4 ஜிபி + 128 ஜிபி, 6 ஜிபி + 128 ஜிபி, 4 ஜிபி + 64 ஜிபி என 3 மாடலில் கிடைக்கும் சி65 ஸ்மார்ட்போன், தண்ணீர் & தூசி எதிர்ப்பு திறன் கொண்டது ஆகும். இதுதவிர்த்து 50 எம்பி ஏஐ (Artificial Intelligence) கேமிரா, 5000 mAh பேட்டரி, 15 w சார்ஜர், 190 கிராம் எடை, 120 Hz அளவிலான கண்களுக்கு சேதத்தை தவிர்க்கும் தரசான்றிதழ் (TUV Low Blue Light Certificate), 5ஜி நெட்ஒர்க், 3 ஜிபி பதிவிறக்கம் செய்யும் திறன், 6.67 இன்ச் டிஸ்பிளே, 720x1604 பிக்சல் காட்சிப்படுத்தும் திறன் ஆகியவையும் உள்ளன.

பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்றது: மேலும், ரியல்மி நிறுவனத்தின் முதல் ஏஐ பூஸ்டர், 4 ஆண்டுகள் எந்த விதமான கோளாறும் இல்லாது செயலாற்றும் திறன் மற்றும் அதற்கான ஜெர்மனி ஆய்வு சான்றிதழ், மழை நீரில் பட்டாலும் டிஸ்பிலேவை செயல்படுத்தும் திறன், ரியல்மி 5.0 ஆண்ட்ராய்ட் 14 ஓஎஸ், 2 டிபி வரையில் ஸ்டோரேஜ் அதிகரித்துக்கொள்ளும் திறன் உட்பட பல அம்சங்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க நினைப்போருக்கு ரியல்மி நல்ல தீர்வாகவும் அமையும்.

இவற்றில் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் ஸ்மார்ட்போன் ரூ.11,499 க்கும், 6 ஜிபி + 128 ஜிபி ஸ்மார்ட்போன் ரூ.12,499 க்கும், 4 ஜிபி + 64 ஜிபி ஸ்மார்ட்போன் ரூ.10,499 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று திறப்புவிழா சலுகையாக ரூ.9,999 க்கு வழங்கப்படுகிறது.