Respective: EarBuds

டிசம்பர், 9: இன்றைய தொழில்நுட்பத்தில் (Technology) பல பொருட்கள் நம்மிடையே நாளுக்கு நாள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்த விபரமான தகவல்கள் அதனுடன் வழங்கப்படும் புத்தகத்திலேயே இருக்கும் என்றாலும், பொருட்களை வாங்கிய மகிழ்ச்சியில் பலரும் அதன் உபயோகம் குறித்த தகவலை படிப்பது இல்லை.

இதன் காரணமாக நாம் வாங்கக்கூடிய எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட பொருட்களில் பழுது ஏற்பட்டால் உடனடியாக அதனை சரி செய்யும் நபருக்கு நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து அதனை சரி செய்கிறோம். நல்லவர்கள் சிலர் இருந்தாலும், கொள்ளை இலாபம் பார்க்க நினைக்கும் பழுது பராமரிப்பாளர்கள் நம்மிடையே இல்லாத ஒன்றை கூறியும் பணம் பறிப்பார்கள்.

அந்த வகையில், இன்றளவில் நம்மிடையே செல்போனுக்கு அடுத்தபடியாக வயர்லெஸ் புளூடூத் இயர்பட்ஸ் (Wireless Earbuds) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் உபயோகம் நமக்கு எளிமை மற்றும் மனதுக்கு பிடித்தமான இடத்தை பெற்றுவிட்டதால், பலரும் அதனை வாங்கி உபயோகம் செய்து வருகின்றனர்.

உங்களின் இயர்பட்ஸ் ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் ஆகவில்லை அல்லது இயர்பட்ஸ் புளூடூத் டிஸ்பிளேயில் தெரியவில்லை என்றால் முதலில் இயர்பட்ஸை ஆன் & ஆப் செய்து ஸ்மார்ட் போனை ரீஸ்டிராட் செய்து முயற்சிக்க வேண்டும். அதனைப்போல, இயர்போனில் சார்ஜ் உள்ளதா? ஆன் செய்யப்பட்டு இருக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும். Bitcoin Digital Box: பிட்காயின் தந்தையே நினைத்தாலும் முடியாத அந்த காரியம் என்ன?.. மர்மத்தை உடைக்கும் பெட்டகம்..! 

EarBuds With Phone
Earbuds With Phone

பின்னர், புளூடூத்தில் Paring அமைப்பு ஆனில் உள்ளதா? என்பதை சரிபார்த்து, போனும் - புளூடூத்தும் இணக்கமாக உள்ளதா ? என்பதையும் சோதிக்க வேண்டும். உங்களின் செல்போன் தவிர்த்து பிற செல்போன்களுடன் புளூடூத் இணைக்கப்பட்டு இருந்தால், பிற போனில் இருந்து முதலில் புளூடூத் இணைப்பை துண்டிக்கவும்.

அடிக்கடி இயர்பட்ஸ் - செல்போன் இணைப்பு துண்டித்தால், இயர்பட்ஸ் தனக்கு தேவையான பேட்டரி சக்தியுடன் உள்ளதா? என சோதனை செய்ய வேண்டும். இயர்போன் கணக்கிட செய்ய பயன்படும் ஆப்-பில் அப்டேட் கேட்கிறதா? என்பதை சரிபார்க்கவும். அப்டேட் வந்திருந்தாள் அதனை மேற்கொள்ள வேண்டும்.

ஒருபக்கத்தில் இருக்கும் இயர்பட்ஸ் வேலை செய்யவில்லை என்றால், அந்த இயர்பட்ஸ் முழு ஜார்ஜில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இரண்டு இயர் பட்ஸ்சும் சார்ஜுடன் இருப்பதை கண்காணித்து, அதனை முதலில் டிஸ்கனெக்ட் செய்து மீண்டும் கனெக்ட் செய்ய வேண்டும். காதில் இயர்பட்ஸ் நன்றாக இருப்பதையும் உறுதி செய்யவும்.

இயர்பட்ஸ் சார்ஜ் ஆகாத பட்சத்தில் சார்ஜர் போர்ட் மற்றும் இயர்பட்ஸ் போர்ட்டில் உள்ள கனெக்டர்களை சுத்தம் செய்ய வேண்டும். அதனைப்போல, கேபிள், அடாப்டர், பவர் சாகெட் போன்றவற்றில் சேதம் இருக்கிறதா? என்பதையும் பரிசோதனை செய்ய வேண்டும். பவர் சப்ளையில் இருக்கும் சிக்கலையும் சரி பார்க்க வேண்டும்.

நமது இயர்பட்ஸ் வேலை செய்யவில்லை என்றால் மேற்கூறிய விஷயங்களை சோதிக்க வேண்டும். பெரும்பாலும் ஸ்மார்ட் போன்கள் உட்பட பல பொருட்களை நாம் வாங்கும் வேகத்தில் அதனைப்பற்றி தெரியாமல் உபயோகம் செய்வதால் சில தொழில்நுட்ப பிரச்னையும் ஏற்படும். அதனை தெரிந்து வைத்து உபயோகம் செய்ய வேண்டும். இயலாத பட்சத்தில் அதிகாரபூர்வ பழுது நீக்கும் மையத்திற்கு சென்று பழுதை சரி செய்யலாம்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 9,2022 07:07 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).