AI Robot | Elon Musk (Photo Credit: Twitter)

செப்டம்பர் 25, ஆஸ்டின் - டெக்ஸாஸ் (Technology News): அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணம் (Austin, Texas), ஆஸ்டின் நகரில் டெஸ்லா (tesla.com) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பல்வேறு புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை உலகுக்கு அறிமுகம் செய்து வருகிறது. அந்நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார்.

கடந்த 2021ம் ஆண்டு எலான் மஸ்க் Tesla Optimus நிறுவனத்தின் மூலமாக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட, மனிதர்களை போல தோற்றமளிக்கும் இயந்திரங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடும் நடவடிக்கையை அறிவித்தார். தொடர்ந்து அது தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன. Bull Attack Death: விழா ஏற்பாட்டாளரை முட்டித்தூக்கி கொன்ற காளை; பதைபதைப்பு சம்பவம்.! 

இந்நிலையில், Tesla Optimus சார்பில் வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ரோபோட்கள் செயல்படும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மனிதர்களை போல கை-கால், உடல் அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ரோபோட் யோகா செய்கிறது, நடனம் ஆடுகிறது, மனிதர்களை போல சிறிய வேலைகளை செய்கிறது.

இந்த ரோபோட்கள் விரைவில் புதிய பரிணாம வளர்ச்சிக்கு வித்திடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் தரம் மற்றும் செயல்பாடுகளை உயர்த்த தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை வரவேற்கும் விதமாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் நமஸ்தே என்ற வார்த்தையுடன் Optimus ரோபோட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.