ஆகஸ்ட் 20, புதுடெல்லி (Technology News): சர்வதேச அளவில் அலுவலக ரீதியிலான பணிகளை மேற்கொள்ளவும், பாதுகாப்பாக விஷயங்களை உடனுக்குடன் பகிரவும் கூகுள் நிறுவனத்தின் ஜி-மெயில் உபயோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஜி-மெயில் மூலமாக குழுவாகவும், தனிநபருக்கும் நாம் பேச வாய்ப்புகள் கிடைக்கின்றன.
தாங்கள் அறிந்த மின்னஞ்சல் முகவரியை கொண்ட நபர்களுடன் பாதுகாப்பாக விஷயங்களை பரிமாறிக்கொள்ள உதவும் ஜி-மெயில், சர்வதேச அளவில் 1.8 பில்லியன் பயனர்களால் உபயோகம் செய்யப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 127 மில்லியன் மக்களால் (93%) உபயோகம் செய்யப்படுகிறது.
தொழில்நுட்ப பக்கங்களை அவ்வப்போது நாம் புதுப்பிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் அவை செயற்கை தொழில்நுட்பங்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் பளுவை குறைக்க சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உபயோகத்தில் இல்லாத கணக்குகள் நீக்கப்படும். Russia Ukraine War: திரையரங்கம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷியா; 5 பேர் பரிதாப பலி; 37 பேர் படுகாயம்.!
இந்நிலையில், தற்போது கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2 ஆண்டுகளாக உபயோகத்தில் இல்லாத ஜி-மெயில் கணக்குகள் முடக்கப்படும்" என தெரிவித்துள்ளது. தங்களது ஜி-மெயில் பயன்பாட்டில் இல்லாத பட்சத்தில், அதனை மீட்டெடுக்க கால அவகாசமும் வழங்கப்படுகிறது.
விருப்பம் இருக்கும் பயனர்கள் தங்களின் கணக்குகளை மீட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு இது தொடர்பான மறுஆலோசனை செய்தியும் வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஜி-மெயில் கணக்கு அழிக்கப்பட்டுவிட்டால், அதே பெயரில் மற்றொரு கணக்கு தொடங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.