Facebook WhatsApp Instagram (Photo Credit: Pixabay)

ஜூன் 17, தொழில்நுட்பம் (Technology News): முகநூல், வாட்சப், இன்ஸ்டாகிராம் நிறுவனங்கள் மீட்ட குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனங்கள் தங்களின் பயனருக்கு செயலிகளில் பல சிறப்பம்சங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.

அவ்வப்போது மேற்கூறிய சமூக வலைதள பக்கங்கள் அவ்வப்போது தொழில்நுட்ப இடர்பாடுகளை சந்திக்க நேரிடும். இதனை அக்குழுமத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் கவனிப்பார்கள். சிலநேரம் பயனர்கள் தங்களின் முகநூல், வாட்சப் போன்ற செயலிகளை உபயோகம் செய்யாத நிலையானது தொடரும். Friends Died: அட்வென்சருக்காக தோழியுடன் அருவிக்கு சென்ற நண்பர்கள் 2 பேர் பலி., ஒருவர் உயிர் ஊசல்.! உயிர்தப்பித்த தோழி.! 

இன்று காலை திடீரென வாட்சப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் சர்வதேச அளவில் திடீரென முடங்கிப்போனது. இதனால் கோளாறை சரிசெய்யும் பணிகளை தொழில்நுட்ப குழு மேற்கொண்டது.

சுமார் 2 மணிநேரமாக தொடர்ந்து நீடித்த தொழில்நுட்ப கோளாறு பின்னர் சரிசெய்யப்பட்டது. நடப்பு மாதத்தின் தொடக்கத்திலேயே இன்ஸ்டாகிராம் இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் முடங்கிப்போனது. கடந்த மே மாதம் பயனர்கள் தங்களின் சமூக கணக்குகளை சிலமணிநேரம் பயன்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டது.