Google CEO Sundar Pichai (Photo Credit: ANI)

ஜூன் 24, வாஷிங்க்டன் டிசி (Washington DC): இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் இறுதியாக நேற்று அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சையை நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோடியும் - கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையும் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்தாலோசித்தனர். அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனம் 10 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யவுள்ளது என தெரிவித்தார்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கவும், அதனை விரைந்து செயல்படுத்தவும் கூகுள் நிறுவனம் முதலீடு செய்வதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வரலாற்று சிறப்புமிக்க பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தால் நாடே பெருமிதம் கொள்கிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் மாவட்டத்தில் Global Fintech Operation Center GIFT உருவாகிறது. இது இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் எனவும் கூறினார். கடந்த 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்த சுந்தர் பிச்சை, 2015ல் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.