ஏப்ரல் 18, சென்னை (Technology News): நாம் நம்முடைய மொபைல் போனில் ஏதேனும் ஒரு செயலியை (Android Apps) பயன்படுத்தும் போதும், கேம் விளையாடும் போதும் மொபைல் போன் சூடாகிறது என்றால் அது அனைத்து வித பயன்பாட்டிற்கு உகந்த மொபைல் போன் இல்லை என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மொபைல் போன் சூடாவதற்கான காரணங்களும் மற்றும் அதற்கான தீர்வுகளை பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம். Benefits Of Curd And Buttermilk: தயிர் மற்றும் மோர் இவற்றின் பயன்கள் என்னென்ன..? – விவரம் உள்ளே..!
மொபைல் போனை சார்ஜ் (Charge) செய்யும் போது அதற்கென்று உள்ள சார்ஜரை பயன்படுத்துவது நல்லது. இல்லையெனில், மொபைல் போன் சேதமடைய அதிக வாய்ப்புள்ளது. மேலும், மொபைலில் ஸ்டோரேஜ் (Storage) அதிகமாக இருந்தால்கூட அதிக சூடாக வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக மொபைல் போனில் ஸ்டோரேஜை கட்டுக்குள் வைத்துக்கொள்வது நல்லது. இதேபோல், சார்ஜ் 100 சதவீதம் நிறைவடைந்த பிறகும், தொடர்ந்து சார்ஜ் போட்டிருந்தால், அதிகளவில் மொபைல் போன் சூடாகும் அபாயம் உள்ளது.
மொபைல் போன் சூடாக வேறு சில காரணங்களும் உள்ளன. அதில், நம்முடைய மொபைலை யாரேனும் ஹேக் செய்தால் கூட மொபைல் போன் எந்நேரமும் சூடாகவே இருக்கும். இவ்வாறு அறிகுறிகள் இருந்தால், உடனடியாக தொழில்நுட்ப வேலையாட்களிடம் சென்று மொபைல் போனை சரிசெய்துகொள்ள வேண்டும். இல்லையெனில், மொபைல் போன் வெடித்து சிதறும் அபாயம் ஏற்படலாம்.