Curd (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 18, சென்னை (Health Tips): கோடைகாலத்தில் நாம் உட்கொள்ளும் உணவில் தயிர் மற்றும் மோர் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், நம் உடல் நலத்திற்கு மிகவும் பயன்தரக்கூடியது தயிர் மற்றும் மோர் இவற்றுள் எது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Schoolgirl Rape: 13 வயது பள்ளி மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்; இருவர் போக்சோவில் கைது..!

தயிர்: இது பாலை காய்ச்சி, புளிக்க வைத்த பின்பு கிடைப்பது ஆகும். தயிர் கெட்டியாக இருக்கும். தயிரில் நன்மை தரக்கூடிய பாக்டீரியா குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். இதில் புரதச்சத்து, ஊட்டச்சத்துகள் மற்றும் ஃரோபயாடிக்ஸ் ஆகியவை கிடைக்கும். தயிர் மற்றும் மோர் ஆகிய இரண்டுமே செரிமானத்தை (Digestion) மேம்படுத்த உதவும். மேலும், நாம் குடலுக்கு நன்மை அளிக்கும் பாக்டீரியா நிறைந்து காணப்படும். பாலை புளிக்க வைக்கும் போது இதிலுள்ள லேக்டோஸ் சர்க்கரை சத்து, லேக்டிக் ஆசிட் போல மாறுகிறது. தசைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஒட்டுமொத்த உடல் இயக்கத்தையும் சீராக செயல்பட உதவுகிறது. இதில் கிடைக்கும் கால்சியம் சத்து எலும்புகளை வலுப்படுத்துகிறது. தயிரை தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் குறையும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மோர்: தயிரில் உள்ள வெண்ணெயை பிரித்து எடுத்தால் கிடைப்பது மோர் ஆகும். இது திரவ வடிவில் இருக்கும். மோரில் உள்ள லாக்டிக் அமிலம் (Lactic Acid) செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. குடலுக்கு குளிர்ச்சியை அளித்து, அஜீரணம் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் விட்டமின் பி12, ரிபோஃபிளேவின் ஆகிய சத்துக்கள் உள்ளன. எலும்புகளை வலுப்படுத்த கால்சியம் சத்து உதவுகிறது. ஒட்டுமொத்தத்தில் மோர் நம் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கின்றது.