ஏப்ரல் 17, சென்னை (Health Tips): நம் உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கும் பூண்டை (Benefits Of Garlic) சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. பூண்டை பெரும்பாலும் ரசம், சட்னி, குழம்பில் சேர்த்துதான் சாப்பிடுவோம். ஆனால், பூண்டை தண்ணீரில் ஊறவைத்து அதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர அதில் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. அதில் முக்கியமான மூன்று பயன்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
புற்றுநோய்: பூண்டில் ஆர்கனோ-சல்பர் சேர்மங்கள் உள்ளன. இதனால், மூளை புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வராமல் இவை தடுக்கிறது. பூண்டு ஊறவைத்த தண்ணீரை பருகினால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். மிதமான சுடுநீரில் தோல் நீக்கிய பூண்டை சேர்த்து பத்து நிமிடங்கள் ஆற வைக்கவும். பின்னர், பூண்டையும் அந்த தண்ணீரையும் பருகி வந்தால், புற்றுநோய் அபாயத்தை தடுக்கலாம். Schoolgirl Commit Suicide: காதல் தொல்லையால் 16 வயது சிறுமி தற்கொலை; ஒருதலை காதலால் விஷம் குடித்து விபரீதம்.!
இருமல் மற்றும் சளி: பூண்டில் சளியை குறைக்கும் பண்புகள் இருக்கின்றன. சளி மற்றும் இருமல் பிரச்சனைகளில் அவதிப்பட்டு வருபவர்கள், ஒரு டம்ளர் தண்ணீரில் 4 பூண்டு பல்லை போட்டு அடுப்பில் வைத்து அதனை சூடேற்றி, பின்னர் அதனை மிதமான சூட்டில் பருகவும். இதனால் சளி மற்றும் இருமல் குறையும். மேலும். இருதய நோய்களுக்கான காரணிகளையும் இது குறைக்கிறது. பூண்டை சாப்பிடுவதால் அது கெட்ட கொழுப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைத்து உடலுக்கு நன்மை அளிக்கிறது என்று ஆய்வில் கூறப்படுகிறது.
உடல் எடை குறைப்பு: உடல் எடையை குறைக்க பூண்டு ஊற வைத்த தண்ணீரை பருக வேண்டும். முதல்நாள் இரவு பூண்டை சுத்தமான தண்ணீரில் ஊறவைத்து, பிறகு காலையில் அந்த நீரை சூடேற்றி வெதுவெதுப்பாக அதனை பருகி வந்தால் தொப்பையை குறைத்து, வாயு பிரச்சனைகளை நீக்கி, கொழுப்புகளை கரைய வழிவகுக்கிறது.