ஏப்ரல் 23, சென்னை (Health Tips): தக்காளி பொதுவாக அனைத்து விதமான ரசம், சாம்பார், குழம்பு, சட்னி ஆகியவற்றில் சேர்த்துக்கொள்ளலாம். இது உணவின் சுவையை அதிகரிக்கிறது. மேலும், தக்காளி இல்லாமல் உணவை சமைப்பது என்பது சுலபமானது இல்லை. தக்காளியை பச்சையாகவும் சாப்பிடலாம். இது நமக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கிறது. College Girl Suicide: காதலருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி விபரீத முடிவு; கம்பி எண்ணும் காதலன்..!
உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் தக்காளியில் மூன்று வகையான புளிப்பு தன்மைகள் உள்ளன. அவை, போலிக் அமிலம், ஃபாஸ்போரிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் ஆகும். தக்காளி எளிதில் ஜீரணமாகக்கூடியதாகும். இது இதய சம்மந்தமான நோய்களுக்கு தீர்வு அளிக்கிறது. மேலும், உடல் பலவீனம், சோம்பலை நீக்கி உடலுக்கு சுறுசுறுப்பை தருகிறது. தக்காளியில் அதிகளவு மக்னீசியம் (Magnesium) நிறைந்துள்ளது. தக்காளி பழத்தை சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவாகி. உடலில் உள்ள ரத்தம் சுத்தமடையும்.
தக்காளியில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு, ரத்த சோகை குணமாகிறது. ஒரு டம்ளர் தக்காளிச் சாறுடன் இரண்டு பேரிச்சம்பழம், சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு சிறந்த சத்துணவு கிடைக்கும். காலையில் 2 தக்காளி பழங்களை சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் கிடைக்கும். நன்கு பழுத்த தக்காளியில் 'வைட்டமின் சி' அதிகமாக இருக்கும். இவை நோய்களை தடுத்து உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.