Gmail (Photo Credit: Pixabay)

ஜூலை 11, சென்னை (Technology News): முந்தைய காலங்களில் இமெயில் எனப்படும் மின்னஞ்சல் மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருந்தது. இமெயில் செயல்பாடு தற்போது வரை மிகப்பெரிய இடத்தை தக்க வைத்துள்ளது. பல்வேறு தளங்கள் இமெயில் தொடர்பான சேவையை வழங்கி வந்தாலும், ஜிமெயில் (G-Mail) மட்டுமே இதுவரை முதல் இடத்தில் இருக்கிறது. ஜிமெயிலை பொறுத்தவரையில் உலகளவில் 180 கோடி பயனர்கள் உபயோகித்து வருகின்றனர். அவ்வப்போது கூகுள் நிறுவனம் பயனர்களின் தனியுரிமை மற்றும் வசதிக்காக பல்வேறு அப்டேட்களையும் வழங்கி வருகிறது. இனி நெட் தேவையில்லை.. வாட்சப் போல மெசேஜ் பண்ணலாம்.. விபரம் உள்ளே.! 

தேவையில்லாத மெயில்களை நீக்க சுலபமான வழி :

இந்நிலையில் கூகுள் ஜிமெயிலில் புதிய டூல் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்பாக்ஸில் குவியும் நியூஸ் லெட்டர் உட்பட பிற மெயில்களை மேனேஜ் செய்ய சப்ஸ்கிரைப்(Subscribe), அன்சப்ஸ்கிரைப் (Unsubscribe) போன்ற செயல் முறையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக தேவையில்லாத நியூஸ்லேட்டர், டீல்ஸ் மற்றும் விளம்பர ரீதியிலான மெயில்களை எளிதில் கண்டறிந்து நீக்க அல்லது அதனை தவிர்க்க வழிவகை செய்ய முடியும். அதேபோல மெசேஜ்களை ஃபில்டர் (Message Filter) செய்தும் பார்க்கலாம்.