Dating App Safety Tips (Photo Credit: @AlonsoStahl X)

ஜனவரி 18, சென்னை (Chennai): தற்போது இந்தியாவில் டேட்டிங் ஆப்புகள் (Dating Apps) பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. பெண்கள் அதிகளவில் டேட்டிங் ஆப்புகளை பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்களால் தைரியமாக ஆண்களிடம் பேசவும் அவர்களைப் பற்றி புரிந்து கொள்ளவும் முடிகிறது. மேலும் தங்களுக்கு ஏற்ற துணையை தாங்களே தேர்வு செய்யவும் இந்த டேட்டிங் ஆப்புகள் பயன்படுகின்றன. புதிய நண்பர்களை உருவாக்கியும் கொள்கின்றனர். இருப்பினும் இது போன்ற டேட்டிங் தளங்கள் மீது பெண்களுக்கு சற்று பாதுகாப்பு பற்றிய பயமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பாதுகாப்பான முறையில் டேட்டிங் ஆப்புகளை கையாண்டு தங்களுக்கான துணையை விருப்பப்படி கண்டு பிடிக்கலாம். Ameer Opens Up: ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை... இயக்குனர் அமீர் கோரிக்கை..!

இணையத்தில் டேட்டிங் ஆப்கள் கொட்டிக்கிடக்கின்றனர். டேட்டிங் ஆப்புகளில் முதலில் கவனிக்க வேண்டியது செயலியின் நம்பகத்தன்மை. செயலியின் வரலாறும், பயனரின் ரிவியூக்களும் முக்கியமாக கவனிக்க வேண்டியதாகும். இந்த செயலியை இதற்கு முன் பயன்படுத்தியவர்களின் ரிவீயூவ்கள் பாசிட்டிவாகவும், நம்பகமாக இருக்கும்பட்சத்தில் அந்த செயலியைப் பயன்படுத்தலாம்.

டேட்டிங் தளங்களில் பதிவு செய்யும் விவரங்களில் தேவையில்லாத கேள்விகள் கேட்கப்பட்டிருந்தால் அந்த தளத்தைப் புறக்கணித்துவிடலாம் அல்லது அந்த கேள்விக்கு பதில் கூறாமல் ஸ்கிப் செய்து விடலாம். மேலும் வங்கி விவரங்கள் ஆரம்பத்திலேயே வாங்கும் செயலிகளை பயன்படுத்தக் கூடாது. முதலில் ஃப்ரீ டிரையல்லில் செயலி பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் அறிந்துகொண்டு பிரீமியத்திற்கு மாறிலாம். Kerala Style Theeyal Recipe: லஞ்சிற்கு கேரளா ஸ்டைலில் தீயல்... கண்டிப்பாக செய்து பாருங்க!

டேட்டிங் ஆப்களில் சுயவிரவங்கள் சரியாக அளித்து வெரிஃபைட் டிக் கொடுத்திருக்கும் புரோஃபைலில் பிடித்ததை தேர்வு செய்யலாம். அதே போல் நீங்கள் சரியான விவரத்தை கொடுத்து வெரிஃபை செய்து வைக்க வேண்டும். நீங்கள் தேர்வு செய்த நபர்களுக்கு உங்கள் புரொஃபைல் பிடித்திருந்தால் மெசேஜ்களை பரி மாறலாம். அவர்களை பற்றித் தெரிந்துகொள்ள பேசிப்பாருங்கள். ஏதேனும் தேவையில்லாத மெசேஜ்கள் அனுப்பினாலோ அல்லது புகைப்படங்கள் அனுப்பினாலோ அவர்களை ரிப்போட் (report) செய்து பிளாக் (Block) செய்யலாம். இது செயலி பயனாளரின் வசதிக்கு ஏற்பவே வழங்கப்பட்டுள்ளது.

பேசுவதற்கு அந்த செயலியை மட்டுமே பயன்படுத்துங்கள். ஆரம்பத்திலேயே உங்களின் பர்சனல் சமூக வலைதளத்தை அவரிடன் ஷேர் செய்ய வேண்டாம். நீண்ட நாட்களுக்கு பேசுகிறீர்கள் என்றாலும் நம்பகத்தன்மை உடையவராக தெரியும் வரை அனைத்து தனிப்பட்ட விவரங்களையும் ஷேர் செய்ய வேண்டாம்.

தற்போது அனைத்து டேட்டிங் ஆப்புகளிலுமே பாதுகாப்புடன் கால், மற்றும் வீடியோ கால் பேசும் வசதி இருக்கிறது. இதில் முதலில் பேசிப் பார்க்கலாம். பிறகு நேரில் எங்காவது பொது வெளியில் செல்லலாமா என முடிவெடுக்கலாம். ஒருவேளை நேரில் பார்த்த பின்பு உங்களுக்கு அவருடன் நல்ல பாண்ட் கிடைக்கவில்லை எனில் அவரை உங்கள் கணக்கிலிருந்து ரிமூவ் செய்து விடலாம். TT Beating Passenger Video: பயணியை அடித்த டிடிஆர்... வைரலாகும் வீடியோ..!

துணை தேடுவதற்காக மட்டுமின்றி தனிமையாக இருப்பவர்களுக்கு இந்த டேட்டிங் ஆப் மிக சிறந்தது. பலரும் இந்த செயலிகளை துணை தேடுவதற்கு மட்டுமில்லாமல், நண்பர்களைத் தேடுவதற்காகவும், தனிமையில் இருப்பதாலும் இதை பயன்படுத்துகின்றனர். அதனால் துணை மட்டுமின்றி இந்த ஆப்புகளின் மூலம் நண்பர்களும் கிடைப்பார்கள். முகம் தெரியாத யாரிடமோ பேசும்பொழுது கவலைகள் குறையும். இதை பொழுது போக்கிறகாக பயன்படுத்தும் இணையதளங்களாக நினைத்து பயன்படுத்தலாம். எதுவாயினும் சற்று பாதுகாப்புடன் பயன்படுத்தினால் உங்கள் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்தும் நபரைகூட சந்திக்கலாம்.

அதேநேரம் டேட்டிங் ஆப் களில் பல ஸ்கேம்கள் நடக்கிறது. ஒரு சிலர் மெசேஜ் செய்து 200 ரூபாய் அனுப்பினால் ஐந்து நிமிடம் பேசுவேன் என்று கூறுகின்றனர். மறுபக்கம் நேரில் வர வைத்து நம்மிடம் இருக்கக்கூடிய பணம் நகைகளை பிடுங்கி விட்டு விடுகின்றனர். ஒரு சிலரோ பாலியல் பிரச்சனை கொடுக்கின்றனர். இதுபோன்ற வலைகளில் சிக்காமல் சுதாரிப்புடன் செயல்பட்டால் கண்டிப்பாக உங்களுக்கான துணை இந்த செயலிகள் மூலம் கிடைக்கும்.