![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2024/01/Kerala-Style-Theeyal-380x214.jpg)
ஜனவரி 18, சென்னை (Chennai): எப்போதும் மதிய உணவாக சாம்பார், ரசம், புளிக்குழம்பு மட்டுமே எடுத்துக் கொள்கிறீர்களா? உங்களுக்கு சலிக்கவில்லை? ஒருமுறை இந்த தீயல்லை செய்து பாருங்கள். கண்டிப்பாக மறுமுறை கேட்பீர்கள்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் – தேவையான அளவு
தேங்காய் துருவல் - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 10
தனியா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கடுகு - 1/4
வெந்தயம் - 1/4
கடலைப்பருப்பு - 2
உளுந்தம் பருப்பு - 2
சோம்பு - 1/4
புளி கரைசல் - 1 டம்ளர்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு TT Beating Passenger Video: பயணியை அடித்த டிடிஆர்... வைரலாகும் வீடியோ..!
செய்முறை: முதலில் தேங்காய் துருவினதை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் சின்ன வெங்காயத்தை உரித்து ஒன்றுக்கு இரண்டாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். புளியை சின்ன கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, ஒரு டம்ளர் புளிக்கரைசலை எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, தேங்காய் துருவலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்தெடுக்கவும். பின்னர் அதனை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து மிக்ஸி ஜாரில் தனியாத்தூள், மிளகாய்த்தூள் அதனுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். Hackers Targeting Indian Govt- Cyber-Espionage Campaign: ரகசிய ஆவணங்களை திருட... இந்திய அரசாங்கத்தை குறிவைக்கும் ஹேக்கர்கள்..!
இப்போது அடுப்பில் மீண்டும் கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, வெந்தயம் ,கடலைப்பருப்பு, சோம்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்னர் அதனுடன் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது அதனுடன் புளி கரைசலை ஊற்றவும். பின்னர் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்த பிறகு நாம் அரைத்து வைத்திருந்த தேங்காயை சேர்க்கவும்.
இப்போது குழம்பு கெட்டியாக மாறிய பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விடவும். அவ்வளவுதான் கேரள மாநில தீயல் ரெடி!