டிசம்பர் 27, புது டெல்லி (New Delhi): இந்தியாவில் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில், நம்பகத்தன்மை கொண்ட முன்னணி நிறுவனமாக இருப்பது சம்சாங் (Samsung). தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனம், இந்தியாவில் மக்களின் மனதை வென்றெடுத்த எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் ஒன்றாகும்.
2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: தற்போது சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்சி ஏ15 5ஜி (Galaxy A15 5G) மற்றும் கேலக்சி ஏ25 5ஜி (Galaxy A25 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. நீலக்கருப்பு, நீலம், வெளிர் நீலம் ஆகிய நிறங்களில் சாம்சங் கேலக்சி ஏ15 ஸ்மார்ட்போன் ரூ.22,499 மதிப்புக்கு 8GB+256GB மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8GB+128GB மாடல் ரூ.19,499 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, நீலக்கருப்பு, நீலம், மஞ்சள் ஆகிய நிறங்களில் சாம்சங் கேலக்சி ஏ25 ஸ்மார்ட்போன் ரூ.29,999 மதிப்புக்கு 8GB+256GB மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8GB+128GB மாடல் ரூ.26,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Disha Patani Bikini: வான் நிற உள்ளாடையில் கவர்ச்சி காட்சிதந்த திஷா பதானி; வெகேஷனில் மஜா செய்யும் நடிகையின் வைரல் கிளிக்ஸ் உள்ளே.!
ஏ25 5ஜி சிறப்பம்சங்கள்: சாம்சங் கேலக்சி ஏ25 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக, பார்வை ஊக்கத்திறன் மேம்பாடுடன் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்பிளே, Exynos 1280 ப்ராசசர், 50 MP அளவுள்ள 3 கேமிரா, போட்டோ எடிட்டிங் அமைப்புகள், 5000 mAh பேட்டரி, Knox Vault பாதுகாப்பு ஆகியவை இருக்கின்றன.
ஏ15 5ஜி சிறப்பம்சங்கள்: சாம்சங் கேலக்சி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக, 6100 மீடியாடெக் ப்ராசசர், 50MP அளவுகொண்ட 3 கேமிரா, வீடியோ எடுக்கும்போது லேசான அதிர்வு இருந்தாலும், அவற்றை நுணுக்கத்துடன் Blur இல்லாமல் படம் பிடிக்கும் திறன், எச்டி போட்டோ, 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே, விஷன் பூஸ்டர், 90Hz புதுப்பிப்பு திறன், கண்களை பாதிக்காத வகையில் வெளிர் நீலம் கலந்த டிஸ்பிளே, 13 MP செல்பி கேமிரா போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் நேரடியாக சென்று, Buy Now அமைப்பு மூலமாக நாம் மேற்கூறிய ஸ்மார்ட்போன்களை வாங்கிக்கொள்ளலாம்.