New Scam Exposed in Delhi (Photo Credit: DCPSouthDelhi X)

மே 17, புதுடெல்லி (New Delhi News): ஒவ்வொரு நாளும் சைபர் மோசடியில் குற்றம் இழைக்கும் நபர்களின் புதுப்புது வழிமுறைகள் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தருவது போல அமைகிறது. அந்த வகையில், டெல்லியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது, பணமே அனுப்பாமல் போலியான பணம் அனுப்பியதற்கான க்யூஆர் தகவலை வைத்து இளைஞர் ரூ.63 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை வாங்கி இருக்கிறார். இதனை வாங்க தான் மாட்டிக்கொள்ளக்கூடாது என அவர் கவனமாக இருந்தாலும், இறுதியில் அதிகாரிகளின் தந்திரத்தால் சிக்கிக்கொண்டுள்ளார். Husband Tortures Wife: கணவன் - மனைவி சண்டையில் கொடூரம்.. பெண்ணை தலைகீழாக கட்டி தொங்கவிட்ட கொடுமை.! 

இளைஞர் சிக்கியது எப்படி?

ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை வாங்க செல்போன் கடைக்கு 2 தவணையில் ரூ.70,000 அனுப்பியதாக போலி தரவுகளை ஏற்பாடு செய்தவர் ரெபிடோ பைக் டாக்சிக்கு தொடர்புகொண்டு சம்பந்தப்பட்ட கடைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு போலியான க்யூஆர் கோடு பயன்படுத்தி செல்போனை வாங்கி இருக்கிறார். கடையில் கணக்கு வழக்கை சரிபார்க்கும்போது பணம் குறைந்து விசாரிக்கப்பட்டுள்ளது. பின் காவல் நிலையத்தில் ரெபிடோ ஊழியருக்கு எதிராக புகார் பதிவாகி, அவரிடம் விசாரித்தபோது அவருக்கும்-வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்பது உறுதியானது.

செல்போன் மீட்பு:

இதனையடுத்து, ரெபிடோ இளைஞர் கொடுத்த தகவலின்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், மோசடி செயலில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர். மேலும், ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை வாங்கி, உடனேயே அதனை ரூ.63 ஆயிரம் பணத்துக்கு விற்பனை செய்துள்ளார். செல்போனை மீட்ட அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரெபிடோ ஓட்டுனரும், செல்போன் நிறுவனமும் மோசடி குறித்து அறியாமல் இருந்துள்ளனர்.

குற்றவாளியின் திருட்டு செயல் குறித்து காவல்துறையினர் தெரிவித்த தகவல்: