மார்ச் 26, புளோரிடா (Technology News): உலகளவில் ஸ்மார்ட்போன் (Smartphone) அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, அதில் வழங்கப்பட்ட செயலிகள் மக்களின் தகவலை பரிமாற உதவியது. மக்களின் விருப்பம் மற்றும் தேர்வுக்கு ஏற்ப அறிமுகமான செயலிகள், இன்றளவில் வயது வித்தியாசமின்றி பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான நேரம் மக்களால் ஸ்மார்ட்போனில் செலவிடப்படுகிறது.
ஸ்மார்ட்போன் உலகம்: குறிப்பாக இளம் வயதுள்ள (Children Smartphone Use) குழந்தைகள், தங்களின் வீட்டில் இருக்கும் பெற்றோர் மற்றும் பெரியவர்களை பார்த்து ஸ்மார்ட்போனை பயன்படுத்த தொடங்குகின்றனர். ஒருகட்டத்தில் தங்களுக்கு என தனியாக செயலிகளுக்கான உள்நுழைவையும் வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் காலப்போக்கில் ஸ்மார்ட்போன் உலகம் என நினைத்து வாழ்க்கையை தொடங்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. Virat Drop a Love Moment after Victory: பெங்களூர் அணியின் முதல் வெற்றியை, குழந்தைகளுடன் கொண்டாடிய விராட்; வைரல் கிளிக்ஸ் இதோ.!
அதிரடி தடை விதிப்பு: அமெரிக்காவில் இவ்வாறான பிரச்சனை மேலோங்கி இருக்கிறது. மேலும், சிறுவயதுள்ள குழந்தைகளும் ஆபாச உள்ளடக்கங்களை பார்க்கும் வாய்ப்புகள் உண்டாகியிருக்கின்றன. இதனால் அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் 18 வயது குறைந்தோர், ஆபாச உள்ளடக்கத்தை அணுகாத வகையில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக பிரான்ஸ்டார் பக்கத்திற்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு ஒப்புதல்: இந்நிலையில், 14 வயதுக்கு குறைவான குழந்தைகள் இனி சமூக வலைத்தளங்களை பயன்படுத்த இயலாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட வடிவில் புளோரிடா மாகாணத்தின் ஆளுநர் கையெழுத்திட்டு இருக்கிறார். ஜனவரி மாதம் 2025 அன்று முதல் இச்சட்டம் அம்மாகாணம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. சட்ட முன்வடிவில் கையெழுத்திட்டு, அதனை அங்கீகரித்த ஆளுநர் ரான் டிசான்டிஸ் செயலுக்கு பெற்றோர்கள் தரப்பில் ஆதரவும், குழந்தைகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.