ஜூலை 20 , புதுடெல்லி (Technology News): பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், திரெட்ஸ் ஆகிய செயலிகள் மெட்டா நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக மார்க் பணியாற்றி வருகிறார்.
வாட்சப் செயலியை சர்வதேச அளவில் 2.24 பில்லியன் மக்கள் உபயோகம் செய்கின்றனர். இந்தியாவில் மட்டும் 487 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச அளவில் இந்தியா உட்பட பல நாடுகளில் சில மணி நேரத்திற்கு வாட்ஸ் அப் செயலிழந்து போனது. Cognizant: 2 இந்திய பெண்கள் உட்பட 6 பேருக்கு முக்கிய பதவியை வழங்கி கௌரவித்தது காக்னிசன்ட் நிறுவனம்; கொண்டாட்டத்தில் ஊழியர்கள்.!
சுமார் 22,000 மேற்பட்ட மக்கள் இது தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு அவை உறுதி செய்யப்பட்டது.
வாட்ஸ் அப் தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்த அந்நிறுவனம், தனது தரப்பு பிரச்சனைகளை சரி செய்து மீண்டும் ஆன்லைன் வந்தது. தொழில்நுட்ப கோளாறின் போது பயனர்கள் மெசேஜ் அனுப்ப இயலாமலும், பெற இயலாமலும் தவித்தனர்.