மார்ச் 21, புதுடெல்லி (New Delhi): ஒன்பிளஸ், மோட்டோரோலா உட்பட, இந்தியாவில் வாங்க கிடைக்கும் பெரும்பாலான மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை எல்லாம் ஓரங்கட்டும் அளவிற்கு விலை மற்றும் அம்சங்களுடன் ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) ஸ்மார்ட்போன் விற்பனைக்கு தற்போது வந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது, Fiery ரெட் மற்றும் கான்குவரர் பிளாக் (Fiery Red & Conqueror Black). iQOO Neo 9 Pro ஆனது 6.78-இன்ச் 1.5K AMOLED LTPO டிஸ்ப்ளே, 144Hz புதுப்பிப்பு வீதம், 2800 x 1260 தெளிவுத்திறன், HDR 10+, 3000 nits பீக் பிரைட்னஸ், PWM டிம்மிங் மற்றும் 20:9 ரேட் விகிதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. iQOO Neo 9 Pro ஆனது Adreno 730 GPU உடன் Qualcomm Snapdragon 8 Gen 2 4nm மொபைல் பிளாட்ஃபார்ம் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் சிப்செட் 8GB/12GB LPDDR5X ரேம் மற்றும் 128GB/256GB சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 'Thank You Thala': "நன்றி தல.." அருணாச்சலம் ரஜினி ஸ்டைலில் ருதுராஜிடம் கேப்டன்சி பொறுப்பை ஒப்படைத்த தோனி..!
iQOO Neo 9 Pro ஆனது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,160mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 2) வசதி இந்த போனில் உள்ளது. 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்920 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவை கொண்டுள்ளது.
இந்த போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.37,999 விலையிலும் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.39,999 விலையில் ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல் ஐக்யூ நியோ 9 ப்ரோ போனின் புதிய வேரியண்ட்-ஐ அமேசான் தளத்தில் வாங்கமுடியும்.